பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி செப்பேடு எண் 20. (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் 2. செப்பேடு பெற்றவர் : பெருங்கரை அட்டாலைச் சொக்கநாதசுவாமி திருக் கோயிலும் தெய்வராயன் மடமும். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1592 சாதாரண ஆண்டு மாசிமீ” (கி.பி. 19-1-1671) 4. செப்பேட்டின் பொருள் : மேலே கண்ட கோயில், மடம் தர்மத்திற்கு நிலக்கொடை இந்தச் செப்பேட்டில், திருமலைரகுநாத சேதுபதி மன்னாது சிறப்புப் பெயர்களான நாற்பத்து ஒன்பது விருதுகள் குறிக்கப் பட்டுள்ளன. இவைகளில் ரவிவர்ம கண்டன், 'வீரமகா கம்பீரன்’ என்ற இருபுதிய விருதுகளைத்தவிர ஏனைய நாற்பத்து ஏழு விருதுகளும் இந்த மன்னரது முந்தைய பட்டயங்களில் குறிப்பிடப்பட்டவைதான். வீரமன கம்பீரன் என்ற விருது பொதுவாக சேதுபதி மன்னரது வீரத்திருவுருவின் அடிப்படையில் வரையப்பட்டதாகும். ஆனால் ரவிவர்ம கண்டன்' என்ற விருது, அவருக்கும், ரவிவர்ம' என்ற விகுதியைக் | கொண்ட கேரளநாட்டு அரசருக்கும் உள்ள சிறப்பான தொடர்பு காரண மாக ஏற்பட்டு இருத்தல் வேண்டும். இத்தகைய வரலாற்று ஊகத்தை உறுதிப்படுத்த வேறு குறிப்புகள் ஏதுவும் இல்லை.