பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 239 இராமநாதபுரம் சீமையில் உள்ள பெருங்கரை கிராமத்து அட்டாலைச் சொக்கநாதர் ஆலயத்திற்கும் அதே ஊரில் உள்ள தெய்வராயன் மடத்திற்கும், தானமாக கொத்தங்குளம் என்ற கிராமத்தை கொடுத்ததை இந்தச் செப்பேடு குறிப்பிடுகிறது. பெருங்கரை கிராமத்தில் இந்த ஆலயமும் மடமும், இராமநாத புரத்தில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் பார்த்தி பனுாருக்கு கிழக்கே மூன்று கல்தொலைவில் உள்ளது. பெருங் கரைக் கண்மாயின் தெற்குப்பகுதியில். இங்கு கோயில் கொண்டு ள்ளவர்கள், சொக்கநாதர் மீனாட்சி, இந்தக்கோயிலின் கருவறைக் கல்வெட்டு (கி.பி.1672) இந்த இறைவனும் இறைவியும் சுயம்பு என்றும் பெருங்கரை தெய்வக்கன்னியா பிள்ளை தெய்வராய பிள்ளையும் அவரது மனைவி வீராயி அம்மையும் சுவாமி கோயிலை கல்லினாலும், அம்மன் கோயில் பூசை மடம் ஆகியவற்றையும் அமைத்து திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் திருமுன்னர் மங்கல நீராட்டு நடத்திவைத்ததாகச் சொல்லுகின்றது . அந்தக் கோயிலின் வாயிலை அடுத்து கிழக்கே உள்ள சிறு அமைப்பு முந்தைய தெய்வராய மடத்தின் மறு உருவாகலாம். இந்தக் கல்வெட்டை மேலெழுந்தவாறு படித்தவுடன் சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கி.பி. 1672 ல் நிர்மாணிக்கப்பட்ட கோயிலுக்கு, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதே கோயில் தர்மத்திற்கு கி.பி. 1670ல் சேதுபதி மன்னர் இந்தச் செப்பேட்டை எப்படி வழங்கி இருக்க முடியும் என்ற ஐயம் எழுகிறது. ஆனால் கல்வெட்டை சற்று கவனமாகப் படித்தால் தான் வினாவிற்கு விடை கிடைப்பதாக உள்ளது. 'பெருங்கரைச் சுயம்பு சொக்கனாதர் மீனாட்சியம்மைக்கு இவ் ஆரில் தெய்வகன்னியாபிள்ளை தெய்வராய பிள்ளை அவர் மனைவி வீராயி அம்மையும் . . . . . . கோயில் கட்டிக்கொடுத்து' (வரிகள் 11-31) என்ற கல்வெட்டுத் தொடரில் இருந்து ஏற் கனவே அங்கு 'சுயம்பு'வாக சுவாமியும் அம்மனும் இருந்தது தெரியவருகிறது. ஆதலால், அந்த சுவாமியின் கோயிலுக்கு - 1 முனிசாமி-சி- பெருங்கரையும் திருமலையும் (தொல்லியல் ஆய்வுத் தொகுதி - 85) பக்கம் 262-63