பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 எஸ். எம் கமால் முதுகுளத்துார் வட்டத்தில், திருவுத்தரகோசமங்கை முதுகுளத் துார் சாலையின் தெற்குப்பகுதி பில் கருமலும், குமார்க்குறிச்சியும் வடபுரத்தில் புளியங்குடியும் அமைந்துள்ளன. இவைகளில் இருந்து சேதுபதி மன்னருக்கு இறுக்க வேண்டிய பளவரி’’ 'சொர்ண ஆதாயம் பற்றிய முந்தைய செப்பேடுகளில் குறிக்கப் பட்டுள்ளன. ஆனால் இந்தச் செப்பேட்டில். செம்புவரி, களஞ்சிய வரி என்ற இருபுதிய அரசிறைகள் சொல்லப்பட்டுள்ளன, இந்தச் செப்பேடு வழங்கப்பட்ட பதினேழாம் நூற்றாண்டிம் பிற்பகுதியில், இராமநாதபுரம் சீமையில் பரங்கிகளது நடமாட்டம் மிகுந்ததால், செம்பு (உலேகம்) இறக்குமதி பரவலாக ஏற்பட்டு செம்பினாலான பொருட்கள் தயாரிக்கும் நிலை ஏற்பட்டதால், அந்த தொழிலுக்கு இந்தப் புதியவரினற்பட்டு இருக்க வேண்டும் என ஊகிக்க இடமுள்ளது. அந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் 'கன்னார்' என அழைக்கப்பட்டனர். அவர்களது குடியிருப்பு களும் கன்னார் இருப்பு (கமுதிவட்டம்) கன்னார் எந்தல், கன்னார் மிஞ்சி (திருவாடானை வட்டம்) கன்னார் பொதுவன் (முதுகுளத்துார் வட்டம்) இராமநாதபுரம் சீமையில் இருந்ததை இந்த ஊர்ப் பெயர்கள் நினைவூட்டுகின்றன. இதனைப் போலவே செம்பு சம்பந்தப்பட்ட ஊர்களும் இந்தச் சீமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அைையாவன, செம்பன் ஊர், செம்பன் குடி (முதுவட்டம்) செம்படக்கி (முதுவட்டம்) செம்பு லான்குடி (பரமக்குடி, திருவாடானை வட்டம்) மற்றும், கிராமங்களில், அறுவடை காலங்களில் மிகுதி யாகக் கிடைக்கும் தானியங்களை கிராமங்களில் பத்திரப்படுத்தி வைப்பதற்கான சேமிப்பு வசதிகளும், களஞ்சியங்களும், அப் பொழுது இல்லை. இராமநாதபுரத்தில் மட்டும், சேதுபதி மன்ன ரது அரண்மனையை அடுத்து பெரிய களஞ்சியம் ஒன்று இறை யாகப் பெற்ற தானியங்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்கு இறையாயிரம் கொண்டான்' என்ற பெயரில் பெரும்களஞ்சி யம் இருந்தது. இதன் அமைப்பு நீண்ட செவ்வகமாக சுமார் எண்ணுாறு அடி நீளமும் இருபத்து ஐந்து அடி அகலமும், ஐம்பது அடி உயரமும் உடையதாக இருந்தது. இந்தக் களஞ்சி யத்தில் ஒர் ஆயிரம் கலம் நெல்லை சமனாகப் பரத்தினால் ஒரு இஞ்சி உயரம் தான் இருக்கும்! (ஒரு கலம் என்பது தொன்னுாறு