பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 2.17 it. படிகள் கொண்டது) ஆதலால் குடிமக்கள் ஆங்காங்கு தங்கள் ஊர்களில், பொது இடங்களில் வைக்கோலைக் கொண்டும்உருளை வடிவத்தில் களஞ்சியங்கள் அமைத்து தானியங்களைச் சேகரித்து வைத்து வந்தனர். இவைகள் சேகரம் பட்டறை என்று இராம நாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் குசுப்பிடப்படுகிறது. இத் தகைய பொது இட ஆக்கிரமிப்பிற்கு வசூலிக்கப்பட்ட களஞ்சிய வரி என்பதாகும். இப்பொழுதும், இராமநாதபுரம் மாவட்டத்து கிராமங்களில், இத்தகைய தானியக்களஞ்சியங்களை அறுவடைக் காலங் களில் அமைத்துப் பயன்படுத்துவ ைத்க் காணலாம். இதனைக் குளுமை' என்றும் வழங்குகிறார்கள். இந்த மன்னர், கி.பி. 1648லும் (செப்பேடு எண் 10) இராமேசுவரம் திருக்கோயிம் ஆவணி மூல திருவிழாவிற்கென முகிழ்த்தகம் கிராமத்தை தானமாக வழங்கியுள்ளதைக் கண்டோம் மீண்டும் அதே விழாவிற்கும் கோயில் பூசைக்கு இந்தப் பட்ட யத்தின் மூலம் நிலக்கொடை வழங்கி இருப்பதில் இருந்து, இராமேசுவரம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்ததும், அந்த விழா இன்னும் பொலிவும் பயனும் பெற வேண்டுமென்ற விருப்பில் தான் இரண்டாவது முறையாக அத்த விழாவினுக்கு தான சாதனம் வழங்கியுள்ளார் என்பதும் தெரிகிறது. அவ்வளவு சிறப்பாக அப்பொழுது அங்கு கொண்டாடப்பட்ட விழா இப் பொழுது கொண்டாடப்படுவது இல்லை.