பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - சேதுபதி மன்னர் செப்பேடுகள் 275 நெசவு செய்யப்பட்ட துணிகளை வாங்குவதற்கும், இலங்கை யில் இருந்து இறக்குமதியாகிய ஏலம், கிராம்பு, குறுமிளகு, சாதிக்காய், சாதிப்பத்திரி, கொட்டைப்பாக்கு, ஆகிய பொருட் களைக் கொள்முதல் செய்வதற்கும் டச்சு, ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிகள் போட்டியிட்டதை பதினேழு பதினெட்டாவது நூற்றாண்டு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த பொருட்கள் வாணிபத்தில் சீதக்காதி மரைக்காயருக்கு ஏகபோக உரிமை இருந்ததும் தெரியவருகிறது. இந்தப் பொருட்களில், தவசம், நெல், அரிசி, பட்டுப் புடவை, பட்டுநூல், கருப்புக்கட்டி, கருப்புக்கட்டிக் கொட்டான், பினாட்டு, புளி, தேங்காய், சங்கு என்பன ஏற்றுமதியானவை என்றும் ஏனையவை இறக்குமதி என்றும் கொள்ளலாம். கருப் பட்டிக் கொட்டான், பினாட்டு என்பது இந்தப்பகுதி வட்டார வழக்கு. கருப்புக்கட்டிகளை வைத்து அனுப்புவதற்கு பனை ஒலையில் முடையப்பெற்ற பெட்டி கொட்டான் எனப்பட்டது. இந்தப்பகுதியில் பனை மரங்கள் ஏராளமாக இருந்தன. அவை களின் பழம் மிகவும் நார் நிறைந்து இருப்பவை. இந்தப்பழங் களைத் தீயிலிட்டுச் சுட்டு, செம்மஞ்சள் நிறமான சதைப்பகு தியை (Guava) சுரண்டி எடுப்பார்கள். தின்பதற்கு இனிமையாக உள்ள இந்தப் பண்டம் பனாட்டு எனப்படும். பனைமட்டு’ என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. இந்தச் செப்பேட்டில் மன்னரது பெயர் ரகுநாத திருமலை சேதுபதி புத்ரன் ரகுநாத திருமலை சேதுபதி என்று (வரிகள் 30/32) குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப் பட்டயம் வழங்கிய கிழவன் என்ற ரகுநாத சேதுபதி - ரகுநாத திருமலை சேதுபதியின் புத்ரன் அல்ல. அவரது தங்கை மகன்-மருமகன். சேதுபதி பட்டத்திற்கு வருபவர் முந்தைய சேதுபதியின் மக னாக இருக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தைப் பேணும் முறையில் புத்ரன்' என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றும் செப்பேட்டுவரி 38ல் மகமை ஊதியமாவது என்று குறிப்பிட்டிருப் பது இந்த வட்டார வழக்கு. இந்தக்கோயிலின் பூஜாகரரான 2. Shukri. Dr. M.A.M - Muslims of Sri Lankan (Colombo) pp. 179 – 183.