பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 எஸ். எம். கமால் இராமலிங்க குருக்களுக்கு வேறு நிலையான வருவாய் இல்லாத காரணத்தால், மகமை ஊதியம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும், மேலே கண்ட பொருள்களின் தீர்வையைத்தவிர, புதிதாக படகுசெய்து கடலில் இறக்கினாலும், கடை வாணியன் செக்கு ஆடினாலும், சரசுவதி பூஜை, தைப்பொங்கல், திருமணம் தின்மை அவைகளுக்கு என நிகுதி செய்யப்பட்ட வரிப்பாடுகளை யும் தண்டல் செய்து கொள்வதற்கு குருக்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டு இருந்தது. இந்தச்செப்பேட்டின் இறுதித் தொடர்கள் தேய்ந்து போய்விட்டதால், அவைகளைச் சரியாகப் படித்து அறிவதற்கு இயலவில்லை. இந்த செப்பேட்டின் இன்னொரு முக்கிய செய்தி. இந்தச் செப்பேடு வழங்கப்பட்ட காலத்தில் கீழ்க்கரையில் பெருமளவு எண்ணிக்கையில் இசுலாமியர் வாழ்ந்துவந்தனர். இந்து சமயத் தினர் மிகவும் குறைவு. மன்னரது மகமை ஏற்படுத்தப்பட்டதற்கு காரணமே இதுதான். என்றாலும் கீழக்கரை துறைமுகத்தைப் பயன்படுத்தும் இஸ்லாமியர் இந்த மகமைத்தீர்வையை இராம லிங்க குருக்களுக்கு அளிக்க இணக்கமாக இருந்தனர் என்பது இந்தச் செப்பேட்டில் இணைந்துள்ள சிறப்பான செய்தியாகும்.