பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எஸ். எம் . கமால் மாறிய பொழுது, இந்த மறக்குடியினரும் மாவலிவானாதரையர்களைப் போன்று பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்ட குடிகளாக விளங்கி பின்னர் உரிமைப்பூசலினால் பிற்காலப் பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பொழுது பதினான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வீறு கொண்டு தன்னாட்சிப் பெற்றவர்கள் இந்த சேது அரையர்கள் என்பது இன்னொரு வரலாற்று ஊகமாகும். மேலும், மெக்கன்ஸி சேகரித்துள்ள பழந்தமிழ் ஏட்டுப்பிரதி யின் - தொண்டை மண்டல, சோழபாண்டிய மண்டல ராஜாக் கள் கைபியத் என்ற ஏட்டுத் தொகுப்பு மறவர்கள், பாண்டியர் களை வென்று, சேதுபதியை பாண்டிய நாட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியதாகவும், அப்பொழுது மறவர்களது ஆட்சியின் எல்லை, தொண்டை மண்டலத்திற்கு தெற்கே சிதம்பரம் வரை அமைந்திருந்ததாகவும் அதில் வரையப்பட்டுள்ளது. அத்துடன் நாளடைவில் இந்த ஆட்சிப்பகுதியை நந்தர்களும், குறும்பர் களும், ஆனைகுந்தி நாயக்கர்களும், சிறிது சிறிதாக ஆக்கிரமித் துக் கொண்டனர் என்றும் பின்னர் வலிவும் பொலிவுமற்று இயங்கிக் கொண்டிருந்த மறவர் சீமையை வடதிசையில் இருந்து வந்த வடுகர்கள் முழுவதுமாக கைப்பற்றினர் என்றும் குறிப் பிடுகிறது. 7 இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் ஒலைமுறி ஒன்று, மருதங்குளம் கிராமத்தை மங்கை பெருமாள் குருக்கள் என்ற அந்தணர்க்கு கி.பி. 1825ல் விண்ணரசு கொண்ட தேவர் என்பவர் வழங்கியதை குறிப்பிடுகிறது". அதில் காணப்படும் விருதாவளிகளில் சில பிற்கால சேதுபதி மன்னர்களது விருதா வளிகளிலும் காணப்படுகின்றன. இன்னொரு ஆவணத்தின்படி மதுரை பாண்டியர்களுக்கு கட்டுப்பட்டுயிருந்த இந்த பழங்குடி யினர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலும் கி.பி. 1380க்கு பின்னர் முஜாகித்வடிா என்ற ஆக்கிரமிப்பாளனது 7) Manal ing am T.V. - Meckenzie Miss N o 30 (1972) pp : 200—201 8) Rajaram Rao T. Manual of Ramnad Samasthanam (1891) p. 206-209