பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O எஸ். எம். கமால் - -- கின்றது . இவர்களை அடுத்து ரெகுநாத கிழவன் சேதுபதி பட்ட மேறியதாக (கி.பி. 1674ல்) அதே வரலாற்று நூல் விளம்பு கிறது. சேதுபதி மன்னர்கள் பற்றிய ஆய்வுரை ஒன்றில் திருமலை சேதுபதி மன்னர் இறந்தது கி.பி. 1670 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது" . ஆனால் இதுவரைக் கிடைத்துள்ள கல்வெட்டு செப்பேடு ஆகியவைகளில் இருந்து இந்தக் கால நிர்ணயம் தவறு என்பது தெளிவாகிறது. இதனை திருமலை ரெகுநாத சேதுபதி மன்னரது சாலிவாகன சகாப்தம் 1598 நள ஆண்டு மார்கழி மாதம் 21 க்கு சரியான 1677 டிசம்பரில் வழங்கப் பட்டுள்ள திருபெருந்துறை கோயில் செப்பேடும் சக 1599 பிங்கல வைகாசிக்கு சரியான கி. பி. 1678ம் செப்பேடு என்றும் உறுதிபடுத்துகிறது. இந்தச் செப்பேட்டில் இரண்ய கற்பத்தனான திருமலை ரெகுநாத சேதுபதி' என செப்பேடு வழங்கியவர் பெயர் தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு முதன் முறையாக இரண்ய கற்ப வேள்வி நடத்தி இரண்ய கற்ப யாஜி என்ற பெயரைப் பெற்றவர் திருமலை ரெகுநாத சேதுபதி ஒருவர்தான். ஆதலால் அவரது திருப்பணியும் ஆட்சியும் கி.பி. 1678 Бh I GTP)Лг தொடர்ந்து வநதுளளன. ஆதலால் இந்தச் செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள 'திருமலை ரெகுநாத சேதுபதி புத்திரன் திருமலை சேதுபதி ரெகுநாத கிழவன் சேதுபதியே யன்றி திருமலை ரெகுநாத சேதுபதி அல்ல. அதற்கு மாறாக, இந்தச் செப்பேடு கிழவன் ரெகுநாத சேதுபதி யால் வழங்கப்பட்டது ஆகும். சேதுபதி மன்னருக்கு வாரிசு இல்லாமல் இறந்து விட்டதால், அவருக்கு அடுத்து சேதுபதியாக பதவி பெறுவர் முந்தைய சேதுபதியின் மைந்தனாக இல்லா விட்டாலும் தம்மை இறந்துபோன மன்னரது மகனாக அரசு ஆவணங்களிம் குறிப்பது இராமநாதபுரம் அரண்மனையின் சம்பிரதாயமாக இருந்து வந்துள்ளது. 1. Rajaram Rao T. Manual of Ramnad Samsthanam (1891) page. 235–36. 2. Seshari Dr. R. Setupatis of Ramnad (1972) Unpublished Thesis