பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 2 H | இந்தச் செப்பேடு திருஉத்திரகோசமங்கை சுவாமிக்கு திருவிடையாட்ட காணியாக திருஉத்திர கோசமங்கை முதலிய ஊர்களைக் கொடுத்துள்ளதை இந்தச்செப்பேடு தெரிவிக்கின்றது. அதுவரை அந்தக் கிராமங்களிலிருந்து சேதுபதி மன்னருக்குக் கிடைத்து வந்த மடத்து வரி, உசாடி வரி, ஆயம், சுங்கம், கூரை வரி, கம்பள வரி, களஞ்சிய வரி, வலங்கை வரி, எமுத்தாணி வரி, கீதாரம், நன்மாடு சோபிக்காத வரி, கலவை ஈழம், புஞ்சை வரி, மனோன்.பிக்கிடாய் வரி, கொல்லர்தச்சர் வரி. திருகை வரி, பாசி வரி, சாணார் வரி, பனங்கடமை, தறிக்கடமை பலப் பட்டடை வரி ஆகிய வருவாய் அனைத்தும் அந்தக் கோயிலுக்கே சேருமாறு இந்தப் பட்டயத்தை சர்வமானியமாக மன்னர் வழங்கி யுள்ளார். ஒரே பக்கத்தில் மட்டும் வரையப் பெற்றுள்ள இந்தச் செப்பேட்டில் இருபத்து எட்டு வரிகள் உள்ளன.ஐந்தாவது வரி யின் கீழ் சேதுபதி என்ற தெலுங்குச் சொல் காணப்படுகின்றது திருஉத்திரகோச மங்கை திருக்கோயில் சார்பாக இந்தச் செப் பேட்டின் அந்தக் கோயிலின் நிர்வாகி புழுகுவனச் சொக்கநாத பண்டாரம் பெற்றுக்கொண்டுள்ள விவரமும் அவரது பணிப்பதவி பெயர் பரதேசி முத்திரை என்பதும் இந்தச் செப்பேட்டின் இறுதி வரிகளில் இருப்பது தெரிய வருகிறது.