பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 27 (விளக்கம்) செப்பேடு வழங்கியவர் : ரகுநாத சேதுபதி காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் சங்கர குருக்கள் மகன் ரகுநாத குருக்கள் 3; செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1601 சித்தார்த்தி ஆண்டு (AD 1678) 4. செப்பேட்டின் பொருள் : இராமநாதசுவாமி கோயிலில் மேலே கண்ட குருக்களுக்கு காணியாட்சி. இந்தச் செப்பேட்டில் சேதுபதி மன்னரது சிறப்புப் பெயர்க ளாக நாற்பத்து ஏழு விருதுகள் பொறிக்கப்பட்டுள்ளன, இவை களில் பாராதிகேசவன், செகதலகீர்த்திப்பிரதாபன் என்ற இரண்டு புதிய விருதுகளைத் தவிர ஏனையவை, இந்த மன்னரதும் முந்தையோரதுமாக முந்தைய செப்பேடுகளில் காணப்படுபவை யாகும். இராமேசுவரம் திருக்கோயில் குருக்களான சங்கர குருக்கள் மகன் ரகுநாத குருக்கள் சேதுபதி மன்னர், இராமேசுவரம் திருக்கோயிலில் ஏற்படுத்தியுள்ள தேவர் கட்டளை சம்பந்தப்பட்ட திருப்பணிகளை மேற்கொண்டு நடத்துவதற்காக சேதுபதியின் முதன்மை குருக்களாக நியமனம் செய்து கட்டளையிட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இராமநாத சுவாமிக்கு உச்சிக்காலம் திருவனந்தல், அபிசேகம், பூஜை நைவேத்திய, ஆகியவைகளை முறையாக நிறைவேற்றி வைப்பதற்கு உடலாக வழங்கப்பட்டுள்ள சேமனுார், முகிழ்த்தகம், நிலமழகிய மங்கலம் சின்னத்தொண்டி ஆகிய நான்கு கிராமங்களையும், மற்று ம்