பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 28 (நகல்) ஸ்வஸ்தி பூரீ சாலிவாகன சகாப்தம் 1615 இதின்மேல் செல் லாநின்ற ருத்ரோத்கரி நாம சம்வச்ரத்து உத்தராயண ஹேமந்த ரிதுவில் புஸ்ய மாசத்தில் கிருஷ்ண பட்சத்து அமாவாசையும் ஹஸ்த நட்சத்திரமும் சுபயோக சுபகரணமும் கூடிய சூரிய கிராண புண்ணிய காலத்தில் தேவை நகராதிபன் சேதுமூலா ரட்சா துாந்தரன் இராமநாதசுவாமி காரிய துரந்தரன் இரவி குலசேகரன் வீரவள நாடன் வேதியர் காவலன் வைகை வள நாடன் வன்னியராட்டம் தவிழ்த்தான் அனும கேதனன் குன்றினுயர் மேருவினில் குன்றா வளை பொறித்தவன் சுவாமி துரோகிய ள் மிண்டன் வீர கஞ்சுகன் சகல சாகித்ய வித்யா வினோதன் அந்தம்பர ராயன் துகலுர் கூத்தத்தில் குலோத்துங்க சோழநல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிருக்கும் திருமலைய இரண் ய கெற்ப யாசி சேதுபதி ரெகுநாத தேவர் அவர்கள் புத்திரன் பூரீ ரெகுநாததேவர் தம்முடைய கனிஷ்டர் வங்கி சத்தில் சுந்தர பாண்டியன் பட்டணத்தில் அக்கிரகாரத்திற்கும் ஏகாம்பர தாத சுவாமி பூசைக்கும் நாம் சேதுமூலத்தில் தானமாகக் குடுத்த கிராமங்கள் அஞ்சுகோட்டை பற்றில் மடதர்மத்துக்குக் குடுத்த கிராமமாவது சுந்தரபாண்டியன் f. சென்னை அருங்காட்சியத்தில் உள்ளது