பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 28 (விளக்கம்) செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி மன்னர் 2. செப்பேடு பெற்றவர் : பெயர் குறிப்பிடவில்லை 3. செப்பேட்டின் காலம் : சகம், 1615. ருத்ரோத்கரி புஷ்ய மீ கி.பி. 1698 4. செப்பேட்டின் பொருள் : சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகாரம், மடம், எ.காம்பர நாதர் சுவாமி பூஜைக்கு ஊர்கள் தானம். இந்தச் செப்பேட்டை வழங்கிய ரெகுநாத சேதுபதியின் விருதாவளியாக பதின்மூன்று சிறப்புப் பெயர்கள் மட்டும் இந்தச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்த மன்னாது முந்தையச் செப்பேடுகளில் குறிக்கப்பட்டவையாகும். இந்தச் செப்பேட்டை வழங்கிய சேது மன்னர் ரெகுநாத தேவர் அவர்கள் புத்திரன் பூரீ ரெகுநாதத் தேவர் என்று மட்டும் குறிப்பிடுவதனால் சேதுபதிகளில் இவர் எந்த சேதுபதி என்ற ஐயப்பாடு எழுவது இயல்பு. சூரிய வம்சத்தினர் என்ற முறை யிலும் இராமபிரானுக்கு நாதன் (ரெகுநாதன்) இராமநாத சுவாமியை வழிபடுகின்றவர்கள் என்ற வகையிலும் சேதுமன்னர் களனைவரும் ரெகுநாத என்ற பெயரினை தங்களது இயற் பெயராகவும் சிறப்புப் பெயராகவும் கொண்டு இருந்தனர். இந்தச் செப்பேட்டின் காலத்தைக் கொண்டும். இரண்ய கெற்ப யா ஜியான சேதுபதி ரெகுநாத தேவர் அவர்கள் புத்திரன்’ என்ற சொற்றொடரிலிருந்தும் இந்தச் செப்பேட்டை வழங்கியவர் ரெகுநாதக் கிழவன் சேதுபதி என்பது புலனா கின்றது.