பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 OC) எஸ். எம். கமால் மூன்று ஊர்களும் இன்றைய பசும்பொன் மாவட்டத்து தேவ கோட்டை வட்டத்தில் அமைந்து இருந்தது தெரியவருகிறது. முந்தைய பாண்டி மண்டலத்து பெருங்கூறான கல்லகநாடு அதளையூர் நாடு ஆகியவைகளுக்குத் தெற்காகவும், பாகனூர் கூற்றத்திற்கு கிழக்காகவும் இந்தப் பட்டயத்தில் சொல்லப்பட் டுள்ள தென்னாலை நாடு (வரி 39) அமைந்து இருத்தல் வேண் டும் என ஊகிக்கப்படுகிறது. நிலக்கொடை பெற்றுள்ள திருக் கோயில் எளுவாபுரி தற்பொழுது எழுவனுார் என வழங்கப் பட்டு வருகிறது. தேவகோட்டை நகருக்கு வடமேற்கே ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் தான் செட்டி நாட்டு திருக்கோவில்களை அமைத்த ஸ்தபதிகள் வாழ்ந்து வந்த னர். இந்தச்செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விரிசிலையாத்துப் பாச்சல் (வரி 39) ஈகாை ஆக்கல் (வரி 41) மரவடை, மாவடை (வரி 52) ஆகியவை வட்டார வழக்குகள். திருமணக்குளக்கால். திருமணக்கண்மாய். என்ற பெயர்கள் இந்தச்செப்பேட்டில் குறிப்பிட்டு இருப்பது போல, இதே வட்டாரத்தில் உள்ள ஒரு சிற்றுார் திருமணவயல் என்ற பெயருடன் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பெருநான்கெல்கை யில் குறிப்பிடப்படும் சிலம்பன் என்ற ஊர் இன்று இல்லை. அரசு ஆவணங்களில் சிலம்பத்தான் என்ற ஊர்ப்பெயர் காணப் படுவதில் இருந்து, இந்த ஊர் பேச்சு வழக்கில் திரிபு பெற்று இருக்கலாம் எனக்கருத இடமுள்ளது. மற்றும், இந்த எல்லை விவரங்களில் கல்லுக்குளக்கால்’ என்ற சொல் காணப்படு கிறது. குளத்துக்கு நீரைக் கொண்டு வர உதவும் கல்லால் ஆன கால் என்பது இந்தச்சொல்லின் விரிவு. இதைப் போன்று கல்லுப் பிள்ளையார், கல்லுக்கட்டி, கல்லூரணி, கல்லுப்பட்டி, கல்லுவீடு என்பனவும் இந்தப்பகுதி வட்டார வழக்கினைச் சேர்ந்தது.