பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 31 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி காத்ததேவர் 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1609 ஆண்டு பிரபவ வருடம் (கி.பி. 1687) 4. செப்பேட்டின் பொருள் : மேலேகண்ட கோயிலுக்கு ராஜ சிங்க மங்கலம் இராமனாத மடைப்பாய்ச்சலில் நிலக்கொடை நாற்பத்து ஏழுவரிகளைக் கொண்ட இந்தச் செப்பேட்டில், ரகுநாத சேதுபதி மன்னரது விருதாவளியாக அறுபத்து எட்டு சிறப்பு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் கீழ்க் கண்ட மூன்று புதிய விருதுகளைத்தவிர, ஏனையவை ஏற்கனவே கண்ட செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ளவையாகும். 1) பரராஜசிம்மன் 2) விதுல சேகர3) ஸ்வஸ்தி பூரீமன் 4) வன்னர்ராய ராகுத்தன் இன்னும் இரண்டு விருதுப்பெயர்கள் (வரிகள் 12,23ல் காணப் படுபவை) முழுமையாகந் தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இந்தச் செப்பேடு வழங்கப்பட்ட கால கட்டத்தில், தமிழகத்தின் ஆட்சியில் இருந்த மதுரை சொக்கரையும், தஞ்சை ரகுநாத நாயக்கரையும் விஞ்சக்கூடிய வகையில் வீரத்