பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 3.13 (கி.பி. 1639 - 78) அவர்மீது தளசிங்கமாலை என்ற சிற்றிலக் கியத்தைப்பாடிய மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிரா யருக்குத் தானமாக வழங்கினார். ஆனால், இதே நிலங்களை பின்னர் புலவரிடமிருந்து பெற்று இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு வழங்குவதற்காக அவற்றிற்குப் பதிலாக மறவனியேந்தல் ஆகிய கிராமங்களைப் புலவருக்குத் தானமாக வழங்கினார் . திருமலை சேதுபதி மன்னரை அடுத்து இராம நாதபுரம் சீமை அரசியலை மேற்கொண்ட கிழவன் என்ற ரகுநாத சேதுபதி, இந்தப் பட்டயத்தின் மூலம் இராமநாத சுவாமிக்கு மேலும் நான்கு மடைப்பாசன நஞ்சை அனைத்தை யும் கொடையாக வழங்கியதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனைய வரியீடுகள் முந்தையச் செப்பேடுகளில் குறிப்பிடப்பட் டுள்ளன. இந்த வரிப்பாடு பற்றிய விபரம் இல்லை. ஆனால் பள்வரி, பலவரி, செம்புவரி, களஞ்சியவரி, வண்டிக்கிடா கோட்டிய எருதுவரி என்ற வரிப்பாடுகள் இருந்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. - -டி 3. Nagasamy — Dr. R-Studies in Ancient familnadu and Societies.