பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 32 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் ரகுநாத சேதுபதி காத்ததேவர். 2. செப்பேடு பெற்றவர் திருப்புல்லாணி தர்ப்பாசனமழகி யாரான தெய்வச்சிலைப் பெருமாள் நாயனார். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1610 விபவ ஆண்டு (கி.பி. 20-4-1688) 4. செப்பேட்டின் பொருள் : மேலே கண்ட சுவாமிக்கு ஊர்கள் தானம். மன்னர் ரகுநாத சேதுபதி காத்த தேவர் வழங்கியுள்ள ஐம்பத்து மூன்று வரிகளைக் கொண்ட இந்தச் செப்பேட்டில் மன்னரது சிறப்புப்பெயர்களாக ஐம்பத்து மூன்று விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் இந்த மன்னரது முந்தைய செப்பேடுகளில் கொடுக்கப்பட்டுள்ளவை தான். இராமநாதபுரம் நகருக்கு அண்மையில் உள்ள திருப் புல்லாணியில் பள்ளி கொண்டு இருக்கும் தெய்வச்சிலைப் பெருமாள் நயினாருடைய ஆடித் திருநாள் கட்டளைக்கும், தினப்படி பூஜைக்கும் திருநந்தாவிளக்கு, திருநந்தவனம், திரு தாப்பு, திருப்பணி ஆகிய கைங்கரியங்களுக்கு சேதுபதி மன்னர் தானமாக வழங்கிய செய்தியை இந்தச் செப்பேடு தெரிவிக் கின்றது. பூரீ வைணவ சிறப்புத்தலமான நூற்று எட்டுத் திருப்பதி களில் இதுவும் ஒன்று சேது அணையை அமைப்பதற்கு சமுத்திர ராஜனை வரவழைத்து, ஒத்துழைப்பு கோரியதாக இராமாயணம் குறிப்பிடுகின்ற இடம் இது என்று கருதப்படுகிறது. அத்துடன்