பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 321 _ வைக்கோல்வரி, புகை இலை வரி, ஆகிய பல திறப்பட்ட வரிப் பாடுகள் தண்டல் செய்யப்பட்டதும் தெரிய வருகிறது. பெரும் பாலும் அனைத்து தொழில் செய்து பணம் ஈட்டுபவரிடமிருந்து வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தன. இன்னொரு குறிப்பு, இராம நாதபுரம் சீமையில் புகை இலை வரி வசூலிக்கப்பட்டதில் இருந்து, இந்த கிராமங்களின் செழிப்பான பகுதிகளில் புகை இலைப்பயிர் விளைச்சல் செய்யப்பட்டதை முதன்முறையாக இந்தப்பட்டயத்தில் இருந்து தெரிய வருகிறது. பொதுவாகப் புகையிலை நன்கு தண்ணிர் வசதி உள்ள ஆற்றங்கரைப்பகுதியில் தான் பயிரிடப்படுவது உண்டு. ஆனால், தண்ணிர் தட்டுப்பாடு மிக்க இராமநாதபுரம் சீமையில் இத்தகைய பணப் பயிர் விளைச்சல் என்பது ஒரு மகத்தான சாதனையென்றே குறிப்பிட வேண்டும். குறிப்பாக பனையங்கால் புளியங்குட்டம், ஆற்றாங்கரை, அழகன்குளம், கங்கைகொண்டான் ஆகிய கிராமங்களில் புகையிலை நன்கு சாகுபடி செய்யப்பட்டது. ஆங்கிலேயர் காலம் வரை நீடித்த இந்த பணப்பயிர் சாகுபடி, கடுமையான சுங்கத்திர்வையினாலும், தகுந்த இலாபம் இல்லாத காரணத்தினாலும் நாளடைவில் நசித்து மறைந்து விட்டது.