பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 33 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரகுநாத சேதுபதி காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : பெயர் குறிப்பிடப்படவில்லை. 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1613 பிரஜோற்பதி தை மீ" 15 தேதி (கி.பி. 13-1-1692) 4. செப்பேட்டின் அடக்கம்: முருகப்பன் மட தர்மத்திற்கும் அக்கிரகாரத்திற்கும் கிராமங்கள் தானம் இந்தச் செப்பேட்டை வழங்கிய இராமநாதபுரம் ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் (கிழவன் சேதுபதி) விருதாவளியாக எழுபத்து எட்டு விருதுகள் இந்தச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகளில் கீழ்க்கண்ட விருதுகள் புதிதாக, இதுவரை சேதுமன்னர் விருதாவளியில் பயன்படுத்தப்படாதவைகளாகும் :1) கட்டாரிச்சாளுவன் 2) பூரீயுத்தன் 3) புனிதன் 4) தேவர் காலாந்தகன் 5) பரிமள சுகந்தன் 6) தொட்டவராந் தவறாதன் 7) சொன்ன மொழி தவறாதவன் 8) பரராச மனோகரன் 9) வேற்றரசு தம்பிரான்