பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 327 10. சமைய நாராயணன், 11. சேதுக்கரைப்புலி. 12. சோமாதிபதி இந்த விருதாவளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இன்று அறியக்கூடியதாக இல்லை. ஆனால் செப்பேட்டின் வரி கள் 16-17ல் காணப்படுகின்ற அச்சந் தவிழ்த்தான்’ என்ற விருது, பூரீவில்லிப்புத்துார் வட்டத்தில் உள்ள ஊரின் பெயராக அமைந்துள்ளது. இதேபோல முந்தையபட்டங்களில் காணப் படுகின்ற மானங்காத்தான்' என்ற விருதுவைப் பெயராகக் கொண்ட ஊர்கள் அருப்புக் கோட்டை, முதுகுளத்துார், பரமக் குடி, ஆகிய வட்டங்களில் அமைத்து உள்ளன. வரி 21 ல் காணப் படுகின்ற சத்துருகண்டன் என்ற விருது கமுதிவட்டத்தில் உள்ள ஒரு கண்மாயின் பெயராகவும் இருந்து வருகிறது. இராமநாதபுரம் மன்னரது சீமைகளில் ஒன்றான குத்தகை நாட்டில் உள்ள முருகப்பன் மட தர்மத்திற்கும் அக்கிரகாரத் திற்குமாக திருப்பொற்கோட்டை, பகையணி, பிராந்தனி என்ற மூன்று ஊர்களைத் தானமாக வழங்கப்பட்டிருப்பதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த ஊர்கள் இன்றைய பசும் பொன் முத்து இராமலிங்கம் மாவட்டத்து தேவகோட்டை வட்டத்தில் உள்ளன. திருப்பொற் கோட்டை மட்டும் திருப்பாக் கோட்டை என வருவாய்த்துறை ஆவணங்களிலும் வழக்கிலும் இருந்து வருகின்றது. இந்த ஊரை ரெகுநாத சேதுபதி மன்னரது தானமாகப் பெற்றவர் யார் என்பதை இந்தச் செப் பேட்டு வாசகம் தெரிவிக்கா விட்டாலும் இந்த ஊரினைப் பெற்றவர் திருவாவடுதுறை ஆதினகர்த்தர் என்பதை தனிப் பாடல் ஒன்று தெரிவிக்கின்றது. நதியாம் விரிசிலை நன்னகர் பொற்கோட்டை பதியாந் துறைசைப் பதிக்கு விதியாக தானமிட்டான் சேதுபதி தாரணி தானுள்ளவும் ஈனமில்லை யெந்த நாளும். . பெருந்தொகை - மதுரை தமிழ்ச்சங்கப்பதிப்பு (1925) பாடல் 1296.