பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O - எஸ். எம். கமால் - - _ கொண்ட கோப்பரகேசரி’ என அழைக்கப்பட்ட அந்த மன்னன் இராமேசுவரத் திருக்கோவிலுக்கும் சென்று அங்கு துலாபா தானம் செய்ததாக கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது அடுத்து கி.பி. 1168-ல் மதுரை அரியாசனத்திற்கு அருகதை உடைய வர்களாக போட்டியிட்ட குலசேகரபாண்டியன் பராக்கிரம பாண்டியன் ஆகிய இளவல்களின் பூசலில் தலையிட்டு, பராக்கிரம பாண்டியனது மகன் வீரபாண்டியனுக்காக இலங்கைப் படைகள் இராமேசுவரத்தில் கரை இறங்கின. மறவர் சீமை முழுவதையும் அந்தப்படை தங்களது பொறுப்பில் மேற்கொண்டன. அப்பொழுது நிகழ்ந்த போர்களில் கலந்துகொண்ட மறவர் சீமையின் தலைவர் கள் வடவால திருக்கை நாடாள்வார், குண்டைய முத்தரையர், அஞ்சுகோட்டை நாடாள்வார், அதளையூர் நாடாள்வார், தழை யூர் நாடாள்வார், என்ற பலதலைவர்கள்.”* அவர்களில் சேதுபதி' என்ற பெயருடையோர் எவரும் குறிப்பிடப்பட வில்லை. தமிழகத்தில் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி யில் தங்களது ஆட்சியை துவக்கிய நரச நாயக்கர் (1417), கிருஷ்ண தேவராயர் (1517). சலுக்கராய திருமலை நாயக்கர் ( 532) ஆகியோர் இராமேசுவரம் திருகோவிலுக்கு வருகை தந்துள்ளதாக குறிப்புகள் உள்ளன. இராமநாதபுரத்திற்கு அண் மையில் உள்ள திருப்புல்லாணி திருக்கோவிலில் கம்பண உடை யாரது கி பி. 1374ம் ஆண்டு கல்வெட்டும்’ தேவிபட்டினத்தில் சுந்தரத்தோளுடைய மாவலிவானதிராயரது கி.பி. 1533 ஆண்டு கல்வெட்டும் காணப்படுகின்றன. மற்றும் கீழக்கரை சொக்க நாதசாமி கோவிலில் உள்ள கி.பி.1540ஆம் வருடத்திய கல்வெட்டு மதுரை நாயக்கரது பாளையக்காரரான பரமக்குடி தும்பிச்சி தாயக்கரை குறிப்பிடுவதாக உள்ளது. இந்தச் செய்திகள் எழுப்பும் வினாவிற்குரிய விடை இந்தப் பகுதியில் மறவரது ஆட்சி பரந்த அளவில் அப்பொழுது இல்லை என்பதே. மேலும் கி.பி. 1182ல் அரபு நாட்டில் இருந்து வந்து 23. Nogasamy Dr. R. - south Indian studies - vol II (1979) p : 1 60-62. 25. Nilakanta Sastri. K. A - Ceylon Historical Journal Spl issue Vol 4 (1 95 b) Chap I II. 26. A R. 114/1903. Tiruppullani Temple 27. ASSI. Vol. IV ( 886) page 216.