பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3-28 எஸ் எம். கமால் வறட்சியால் வாடிக் கொண்டிருந்த சேதுபதி சீமைக்கு ஒரு முறை திருவாவடுதுறை ஆதினகர்த்தர் வருகை தந்தபொழுது, மழைபெய்ய வேண்டிப்பாடு மாறு சேதுபதி மன்னர் கோரினார் என்றும், அதனை ஏற்று ஆதினகர்த்தர் தமிழ்பாட மழை பொழிந்தது என்பது ஒரு செய்தி. இன்னும், வளமையான விரிசிலை ஆற்று விளைச்சல் பகுதியான பொற்கோட்டை கிராமத்தைத் தானமாகப்பெற்று, சோற்று மயக்கம் தீர்ந்த காரணத்தினால், நாள்தோறும் இந்த ஆதினகர்த்தர்கள் சேது பதிகளுக்கு நன்றி பாராட்டும் வகையில் சேதுபதி அன்னமும் காவிரி நீரும், ஆவுடையப்பர் நிழலும்’ ’ எனச் சொல்லிக் கொண்டாடும் மரபு இருந்ததாகவும் தெரிகிறது. * இந்தச் செப்பேட்டு வரி 29ல் காணப்படுகின்ற பிறிதிக்கி னையாக வரி 37ல் உள்ள கொம்பு' வரி 50ல் உத்திரோத் திரமாக வரி 46ல் பனைவடலி என்ற சொற்கள் வட்டார வழக்குகள். தானமாக வழங்கப்பட்ட ஊர்களின் எல்லைகளாக பகையணி, பிராந்தணி, ஏரணி, அமணி, அரையயணி என்ற ஊர்ப் பெயர்கள் காணப்படுகின்றன. இவைபோல சறுகணி, மறவணி, கோவணி, எழுவனி, தேவர்தத்தனி, இலஞ்சணி, சங்கணி, கேசனி, கொத்தணி, சேந்தணி, குந்தனி, மருதணி, நாகனி, பாகனி, பொசுக்கணி, பூவாணி, சாத்தணி, சிந்தணி, சூச்சணி, தாவணி, திராணி, துதியணி, வடுகணி, வரவனி, வசந்தணி, வேளணி, என்பன சேதுநாட்டில் அணி என்ற விகுதியுடன் வழங் கும் ஊர்களும் உள்ளன. மேலும், சிறுகைக்கண்மாய், புலியாண்டான்கரிசல், சொல்லுடையாத நாமத்து நெம்மேனி, நவதேவன் ஊரணி, வலையன் சோழியன் கண்மாய் என்பனவும் பொருள் பொதிந்த புதுச் சொற்களாகும். வரி 52ல் உள்ள அசுவமேதயாகம் பண்ணின பலத்தை . . . . . என்ற தொடர் ஒரு புதிய சொல் லாட்சி ஆகும். 2. பெருந்தொகை மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு (1985) பாடல் 1296 , அடிக்குறிப்பு பக்கம் 467.