பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 11 இந்தப்பகுதிக்கு வருகை தந்து’ பதின்மூன்று ஆண்டுகள் இந்தப் பகுதியில் பவித்திரமாணிக்கப் பட்டினத்தின் மன்னராக விளங்கி ஏறுபதியில் தியாகியாகி புகழுடம்பில் பொலியும் அரபுநாட்டுப் புனிதர் சுல்த்தான் செய்யது இப்ராகிம் (வலி) அவர்களது வாழ்க்கை குறிப்புகளும், இந்தப் பகுதிக்கு கி.பி. 1292ல் வருகை தந்த உலகப்பயணிகள் மார்க்கோ போலோ, கி.பி. 1343ல் வருகை தந்த இப்னு பதுாதா ஆகியோரது பயணக் குறிப்பு களிலும்’ மறவர் ஆட்சி பற்றிய செய்திகள் காணப்படாதது சேதுபதிகளது தொன்மைக்கு துணை செய்யாத ஆவணங்களாக அமைந்துள்ளன. என்றாலும், சேதுபதி மன்னர்களது தலைமை இடமாக இருந்து வந்த சூரன்கோட்டை பற்றிய குறிப்பு இலங்கை வரலாற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. கி.பி. 1168ல் பாண்டிய மன்னர் வாரிசுப்பூசலில் பராக்கிரமபாண்டியனது அன்புக்கிழத் தி யின் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக ஈழத்தில் இருந்து இராமேசுவரம் வழியாக பாண்டிய நாட்டிற்குள் புகுந்த இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவின் படைகள் இளவல் குலசேகர பாண்டியனது படைகளை எதிர்கொண்டு அழித்த போர்க்களங்களின் பட்டியலில் சூரன் கோட்டை இடம் பெற்றுள் ளது. 89 இந்த மண்கோட்டையை மாமன்னர் கிழவன் சேதுபதி கி.பி. 1678-80ல் கற்கோட்டையாக மாற்றியதுடன், பெயரையும் இராமநாதபுரமாக மாற்றி சேது நாட்டின் கோநகராக அமைத் தார் . இதனை உறுதி செய்வது போல் முந்தைய இராமநாத புரம் கோட்டைப்பகுதி முழுவதும் வருவாய்த் துறை பதிவுகளில் சூரங்கோட்டை' என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோட்டைப்பகுதி நீங்கலாக உள்ள இன்றைய இராமநாத புரம் நகர், அச்சுந்தன்வயல், ராசசூரியமடை, சக்கரக்கோட்டை 28. Hussaini S.A. O. - History of Pandya Kingdom (1962) рр :(48) 29. Nilakanta Sastry. K.A - Foreign Notices of South India (197 2) pp. 27O. 30. Concise History of Ceylon (1961) p 224 (Map) 31. Rajaram Rao T. Manual of Ramnad Samasthanam (1891) р. 2.23