பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 35 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் செகுநாத கிழவன் சேதுபதி காத்தத் தேவர் . 2. செப்பேடு பெற்றவர் t திருப்புல்லாணி தெய்வச்சிலை நயினார் திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் . சாலிவாகன சகாப்தம் 1619.வெகு தானிய வருடம் பங்குனி மாதம் 25ந் தேதி (கி.பி. 20-3.1699) 4. செப்பேட்டின் பொருள் : மன்னார் முத்துசலாபத்தில் முத்துக் குளிக்கும் உரிமை. இதுவரை எந்தச் சேதுபதி மன்னருக்கும் இல்லாத வகை யில் இந்த மன்னரது இந்தச் செப்பேட்டில் எண்பத்தொன்பது சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகளில் அழகுக்கு வாலசீவகன்” . கந்தமாதனகிரியான் என்ற இரு புது விருதுகளைத் தவிர ஏனையவை அனைத்தும் இந்த மன்னரது முந்தைய செப்பேடுகளிலும் அவர்தம் முந்தையோரது செப்பேடு களிலும் காணப்படுபவையாகும். திருப்புல்லாணி தெய்வச்சிலைப் பெருமாளுக்கு இராமநாத புரம் சேதுபதி மன்னர், மன்னார் முத்துச் சலாபத்தில் ஐந்துகல் வைத்து முத்துக்குளிக்கும் உரிமையை நல்குவது இந்தச் செப் பேடு. இதன் மூலம் திருக்கோயில் திருப்பணி அன்றாடக் கோயில் பூஜைகள், விழாக்கள் ஆகியவைகளுக்கு விளை நிலங்களையும் ஊாகளையும் தானமாக வழங்குதல் என்ற அறப்பணிகளுடன் அமையாமல் தங்களது பாரம்பரிய உரிமையினையும் திருக்