பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எஸ். எம். கமால் பட்டனங்காத்தான், பேராவூர் என்ற வருவாய் கிராமப்பகுதி சளாக வருவாய்த்துறைப் பதிவுகளில் காணப்படுவதும் இங்கு நினைவு கூரத்தக்கதாக உள்ளது. f சேதுபதிகளும் சோழர்களும் மேலும், இந்த மன்னர்கள் சோழப் பேரரசர்களை போன்று (அதாவது திருபுவன தேவன், ராஜராஜதேவன் என்பன போன்று) தங்களது பெயர்களில் தேவர்' என்ற விகுதியையும் இணைத்துக் கொண்டனர். அத்துடன் சோழர்குல முன்னோரான சூரிய தேவரைச் சுட்டும் பெயர்களையே தங்களது அரசுப் பெயர்களாக (ராஜசூரிய தேவர், ரகுநாத தேவர், விஜயரகுநாத தேவர், குமார விஜயரகுநாததேவர்) என புனைந்து கொண்டனர். பிறப்பு, இறப்பு, முடிசூட்டல் போன்ற சடங்குகளில் பிராம்மணிய நடைமுறைகளையும் மேற்கொண்டனர். சோழர்களைப் போன்று வடமொழி வேதங்களில் சிறந்த விற்பன்னர்களையும் சிவப் பிராமணர்களையும் ஆதரித்து அவர்கள் சேது பூமியில் நிலைத்து வாழ்வதற்காகப் பல சதுர்வேதி மங்கலங்களை அமைத்து அவை களை அவர்களுக்கு சர்வ மானியமாக வழங்கினர். சமயப் பிடிப்பு : தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும், பிரம்மாண்டமான ஆலயங்களை நிர்மாணித்த சோழர்கள் சாஸ்தா. பிடாரி, திரெளபதை, சப்தகன்னிமார் போன்ற சிறு தெய்வ வழி டாட்டிற்கும் உதவியது போல சேது மன்னர்களும் இராமநாத புரம், திருப்புல்லாணி போன்ற பெருங்கோயில்களை நிர்மாணித்த துடன் சிறு தெய்வங்களான ஐயனார் வாழ வந்த அம்மன், அரியநாச்சி அம்மன், மாரியம்மன், கருமாரியம்மன், அங்காள ஈஸ்வரி, நாகநாதர் ஆகியோர்களுக்கு திருக்கோயில் அமைத்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்தனர். இவ்விதம், பல்லாற்றானும் சோழர்களை பின்பற்றிய சேதுபதி மன்னர்கள் சமயத் துறையிலும், இந்து சமய-சைவ சித்தாந்த நெறியினை உறுதியாகப்பற்றி வந்தனர். குறிப்பாக இராமேசுவரம் திருக்கோயில் கொண்டுள்ள இராமநாத சுவாமி யிடம் அவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டு அந்த தெய்வத்தின் தொண்டரடிப் பொடியாக வாழ்ந்து வந்ததை வரலாறு விளம்பு