பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம். கமால் 3.54 வழங்கியுள்ளார். இந்தச் செப்பேட்டின்படி திருக்கோயில்தானத்தால் மன்னார் பகுதியில் (இலங்கை கடற்கரை) நடைபெறும் முத்துச்சலாபத்தில் மூன்று கல்வைத்து முத்துக்குளித்துக் கொள்ள வேண்டியது. சேதுபதிகளுக்கு எதிர்க்கரையான இலங்கையின் கொண்டாச்சி பகுதி வரையில் அறுபது கல் முத்துக்குளிப்பதற் கான உரிமை இருந்ததை இராமநாதபுரம் சமஸ்தான மேன்யுவல் தெரிவிக்கின்றது என்றாலும் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி யை கி.பி. 1795ல் சிறையிலிட்டு தங்களது ஆதிக்கத்தை சேது நாட்டில் ஏற்படுத்திய ஆங்கிலேய ஆதிக்க வெறியர்கள் திருப்புல் லானி, இராமேசுவரம் திருக்கோயில்கள் தங்களது படகுகளைக் கொண்டு மன்னார் முத்துச்சலாபத்தில் கலந்துகொள்ளும் உரிமை யை கி. பி. 1822ல் தடுத்துவிட்டனர்" . இத்தகைய வழிபாட்டுத்தலங்களுக்கான வருவாய்களையும் ஒருசேர ஆங்கிலேயர்களே அனுபவித்து வந்தனர். இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் பாராபட்சம் காண்பிக்கவில்லை! இராம நாதபுரம் குத்புதீன் சாகிப் தர்ஹா, பார்த்திபனூர் தாடிப்பக்கீர் தர்ஹா, திருப்புவனம் மலங்குசாகிப் தர்ஹா ஆகிய இஸ்லாமிய புனித இடங்களுக்கு துந்தா விளக்கு மற்றும் கந்துாரி போன்ற செலவினங்களுக்கு ஆங்காங்கு உள்ள சுங்கச்சாவடிகளின் வசூலி லிருந்து சேது மன்னர்கள் அனுமதித்திருந்த மான்யத் தொகை களை அவர்கள் நிறுத்தி விட்டதை வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன . . 1. Rajaram Rae. T.-Manual of Ramnad Samasthanam (1891) Page 269 2. Madras District Records – Vol. 467O (A.D.—1822) Page-2O 3. Madras District Records vol. 4669, 4670. 4681-A.