பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 எஸ். எஸ். கமால் களையும் இந்தக் கட்டளைக்கு உட்படுத்தி உள்ளதைகுறிக்கப்பட் டுள்ளது. மேலும் இராமேசுவரத்தில்சுக்கிரவார நாள் அன்றுகூவாமி சன்னதி, விஸ்வநாத சன்னதி, அம்மன் சன்னதி ஆகிய சன்னதி களில் உண்டியலில் கிடைக்கின்ற ஆதாயமும், ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்தம் பட்டு, பருத்தி, பொன் வெள்ளி, பொட்டுக்காரை ஆகிய உபயங்களும் இராமேசுவரம் தலத்தில் உள்ள சேதுமா காளியம்மன், நம்பு நாச்சியம்மன் கோயில்களில் கிடைக்கின்ற உபயங்களும் சேதுமன்னர் வழங்கும் காணிக்கைளும் பட்டர்மார் ஆண்டுதோறும் அளிக்கின்ற அறுபது பொன்னும் அந்த வகையில் கிடைக்கின்ற அபராதத் தொகையும் கடற்கரையில் தோணிகளுக்கு கடவுச் சீட்டு கொடுப்பதன் மூலமும் பாடி காவல் தரகன் சுதந்திரம், ஆகிய ஆதாயங்கள் அனைத் தையும் இந்தக் கட்டளைக்கு பயன்படுத்துமாறு இந்தச் செப் பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தீர்வையாக நூறு மரக்கால் தானியத்திற்கு ஒரு மரக்கால் தானியமும், எண்ணெய், தேன், நெய் ஆகியவை களுக்கு நூறு படிக்கு ஒரு படியும், எண்ணிக்கையாக விற்கப் படுகின்ற பொருள்களுக்கு நூற்றுக்கு ஒன்றே முக்காலும் உள் ளூர் வியாபாரிகளுக்கு நூற்றுக்கு ஒன்றும் நிறுக்கப்பட்ட பொருள்களுக்கு நூற்றுக்கு ஒன்றேகால் பணமும் மகமை பத்துப் பொன்னுக்கு அரைப்பணமும் பாம்பன் துறைமுகம் வழியாக இராமேசுவரத்திற்கு கொண்டுவரப்படுகிற நெய் சுமை ஒன்றுக்கு ஒன்னரையே மாகாணிப் பணமும் காளை மாடுகளுக்கு சூலம் போடுதல், அக்கரைக்கு அவைகளை ஏற்றி அனுப்புதல் ஆகிய வகையில் கிடைக்கும் வருவாயும் இராமேசுவரம் அரண்மனைப் பட்டியில் உள்ள பயனற்ற பசுக்கள் மற்றும் அனாதிப் பிரேதங் களின் ஆதாயம் ஆகியவைகளும் இந்தக் கட்டளைச் செலவு களுக்கு உரியவைகளாக இருந்தன. மற்றும் ஆடித்திருநாள், கோவில் பரிவட்டச் சுதந்திரமும், மண்டகப்படி பரிவட்டச் சுதந்திரமும் இராமேசுவரத்தை அடுத் துள்ள தோப்புகள், கொல்லைகள், நந்தவனங்கள், தரவை ஆகிய வைகளிலிருந்தும் சேமனுர் கிராமத்து நிலங்களிலிருந்தும் வரப் படும் வருமானங்களையும் இந்தக் கட்டளைக்குப் பயன்படுத்த மன்னர் அனுமதி வழங்கியிருந்தார்.