பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 39 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி காத்தத் தேவர் 2. செப்பேடு பெற்றவர் : இராமநாதபுரம் கோதண்டராம சாமி ஆலயம் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1637 ஜெய ஆண்டு (கி.பி 24-1-1715) 4. செப்பேட்டின் பொருள் : மேலேகண்ட கோயில் நித்ய கட்டளைக்கு கிராமங்கள்தானம் இந்தச் செப்பேடு ரெகுநாத சேதுபதி என்ற சேதுபதி மன்னரது பொதுப்பெயரில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடைய காலத்தை ஆய்வு செய்யும்பொழுது இதனை வழங்கியவர் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் என்பதை அறிய முடிகிறது. மேலும் இந்தச் செப்பேட்டின் வரிகள் 29, 30ல் கண்ட தமைய னார் முத்துவடுகநாத தேவர்' என்ற சொற்றொடரும் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றது. இந்த மன்னரது விருதாவளியாக எழுபது சிறப்புப் பெயர் கள் இந்தப் பட்டயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் மதுரையார் மானங்காத்தான் (வரி-15) சிந்தித்த காரியம் ஜெயம் பண்ணும் மனோகரன் (வரி-20) என்ற இரண்டு புதிய சிறப்புப் பெயர்கள் முதன் முறையாக இந்தச் சேப்பேட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சேதுபதிச் சீமையின் கோ நகராக விளங்கிய இராமநாத புரம் கோட்டையின் தென்பகுதியில் அமைந்து இருப்பது கோதண்டராமசுவாமி ஆலயம். இந்த ஆலயத்தை அடுத்துள்ள சொக்கநாதர் ஆலயத்தை தளவாய் என்ற இரண்டாவது சடைக் கண் சேதுபதி (கி.பி. 1633-45) நிர்மாணித்தார். அங்கே அந்த மன்னரது உருவச்சிலையும், நிறுவப்பட்டுள்ளது.