பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம் . கமால் 3 7 Ο --- - - இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னர், பூரீ ராம நாத சுவாமியை வழிபடும் தீவிர பக்தராக விளங்கிய பொழுதி லும் வைணவக் கோயிலான இந்த ஆலயத்தின் பால் அக்கரை கொண்டு அன்றாட பூஜை, அபிஷேகம், நைவேத்தியம், திரு மாலை, திருவிளக்கு, ஆகியத் திருப்பணிகளுக்கும், திருவிழா விற்குமாக இந்தத் தான சாசனத்தை வழங்கியுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள சாக்கான்குடி, பட்டப் புல் லான் ஆகிய இரு ஊர்களும் இன்றைய இராமநாதபுரம் வட்டத்தில் உள்ளன. வழிவழி வந்த சேதுபதிகளது சமயப் பொறையையும் சமரச நோக்கினையும் இந்த தானம் எடுத்துக் காட்டுகிறது. மன்னரும் அவரது உறவினர்களும் ஆண்டுதோறும் ஐந்நூறு கலம் நெல் இந்தக் கோயிலுக்கு வரிசைக் கட்டளையாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததுடன் மன்னரது குடிகளும் வருட மகமையாக ஒரு பணமும், இடையர்கள் கோபாலக் கட்டளையாக திருமணத் தின் பொழுது ஐந்துபடி நெய்யும், இந்தக் கோவிலுக்குக் கொடுத்துவருமாறு உத்தரவிட்டு இருப்பது மிகவும் பாராட்டுக் குரிய செயலாகும். சேது நாட்டில் அன்றைய இடைக்குல மக்கள் கன்று காலி வளர்ப்பவர்களாக மட்டுமல்லாமல் நல்ல விவசாயி களாகவும் இருந்தனர் என்பதை இந்தச் செப்பேடு தெரிவிக் கின்றது. மறவர் சீமையில் வைணவர்கள் குறைந்த மக்கட்தொகை யினராக இருந்ததாலும் முந்தைய சேது மன்னர்களும் இந்தக் கோயிலின் நலனில் தகுந்த அக்கறை கொண்டிராத காரணத்தி னாலும் இந்த மன்னர் மேலே கண்ட வருடக் கட்டளை, வருட மகமை, ஆகியவைகளை ஏற்ப்படுத்தியுள்ளார். இதனை (வரிகள் 51, 52) ல் மன்னர் தம்முடைய வங்குசத்திலே ஒன்றா கிய பெரியவர்களுக்குச் சுகிர்தமாக நிலவரம் பண்ணி வைத்த தாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் திருக்கோயில் என்பது காலம் காலமாக சமுதாயத்தின் வைதீக உணர்வுகளின் சின்னமாக விளங்கி வருவதால் அதனைப் போற்றிப்புரப்பது அரச தர்மம் அத்துடன் ஆன்மீக மக்களுடைய ஈடுபாடும் அதில் இருக்க வேண்டுமென்பதை உணர்ந்த மன்னர், இத்தகைய ஏற்பாட் டினைச் செய்து உள்ளார். இந்தச் செப்பேடு 18 ஆம் நூற்றாண்டில் சேதுபதிச் சீமையில் வாழ்ந்த மக்கட் சமுதாயத்தை இனங்காட்டுவதாக உள்ளது. வரிகள் 43-49 ன்படி இங்கே இராஜபுத்திரர், குரு