பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 எஸ். எம் கமால் சமயப்பொறை : உள்ளத்தால் இந்த மன்னர்கள் சைவ சமய நெறியைச் சார்ந்தவர்களாயினும், நடைமுறையில் இந்து சமயத்தின் இன் னொரு பிரிவானை வைணவத்திற்கும் வாழ்வளித்து வந்தார்கள் என்பது மிகையல்ல. திருமங்கை ஆழ்வார் மங்கள சாசனம் செய்த புல்லாணிப்பெருமாள் திருக்கோயில், இந்த மன்னர்களது திருப் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அத்துடன் இராமநாதபுரம் கோதண்ட ராமசாமி பெருமாள் ஆலயம், அபிராமம் வரதராஜ பெருமாள் கோவில், ராஜசிங்க மங்கலம் கரியமாணிக்க பெருமாள் ஆலயம் தொண்டி உந்திபூத்த பெருமாள் திருக்கோயில் போன்ற ஏனைய வைணவத் திருக் கோயில்களும் இந்த மன்னர்களது வள்ளண்மையினின்றும் விடுபடவில்லை, மேலும் வடமொழியில் வல்லுனர்களான வைணவப் பெருமக்களும் இந்த மன்னர்களது சிறப்பான ஆதரவுக்குரியவர் களாக இருந்து வந்தனர். அமைச்சர்களாகவும் அரசவைப் புலவர்களாகவும் மன்னர்களிடம் நெருக்கமான நிலையில் அவர் கள் இருந்து வந்துள்ளனர் என வரலாறு விளம்புகிறது. இந்து சமயத்தினின்றும் பிரிந்து, தனித்து இருந்து தன் னிலை குன்றிய சமணச்சமயச் சிறுபான்மையினர் கூட, சேது மன்னர்களது தண்ணளிக்கு உரியவர்களாக இருந்ததை சில செய்திகள் தெரிவிக்கின்றன. மணிமுத்தாறு ஆற்றின் வடகரை யில் உள்ள ஜீனேந்திர மங்கலம் என்ற அனுமந்தக்குடி* ஒலைச்சாசனம் இத்தகைய செய்தியொன்றை உள்ளடக்கியுள் ளது. இந்த மக்கட்பிரிவினர் மறவர் சீமையில் மனநிறை வுடன் மற்ற பிரிவினர்களைப்போல் அறப்போது, கிடாரம், மேலச்சீத்தை, முத்தனேந்தல், நாகனேந்தல், நாகாடி, சாத்தனுTர், சாத்தமங்கலம், சாத்தணி, மும்முடிசாத்தான் தெளிசாத்த நல்லூர் ஆகிய ஊர்களில் வாழ்ந்து வந்த செய்திகள்

  • » 5ігётт5ёт.

32. அனுமந்தக்குடி - இன்றைய பசும்பொன் மாவட்டத்தில் தேவகோட்டை நகருக்கு நேர் கிழக்கே எட்டுக்கல் தொலைவில் உள்ளது. 33. வேதாச்சலம் - கல்வெட்டு இதழ் எண் 18