பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 எஸ் எம் கமால் 10. இளமை ஆட்சிக்கு தயாபரன் 11. சத்ருவாதியர்களுக்கு இடியேறு 12. கனகபல்லக்கும் சிங்க முகமும், பஞ்சவர்ணப் பாவாடையும் நட நாடகசாலையும் உண்டான தேவன் 13. தெட்சண சிங்காசேனாபதி 14. நரபதிக்கு மேலான சேதுபதி 15. பலத்துக்கு ஆதிசேஷன் 16. அடிகுக்கு வால சிவன் 17. களிக்கோபன் இந்த விருதுகளில் தொடர் எண் 1,2,4,10ல் குறிப்பிடப் பட்டுள்ள விருதுகள் மன்னரது மாண்யையும் தொடர் எண்கள் 3, 5, 6, 7, 8, 9, 11, 12, 13, 14 ஆகியவைகளில் குறிபிடப்பட் டுள்ள விருதுகள் அவரது வீரத்தையும் அரசியல் சிறப்பையும் குறிப்பதற்காக வரையப்பட்டவையாகும். இந்த மன்னரது ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. அவர் ஒரு சிறந்த நிர்வாகி கலைஞர் என்பதை அவரது செயல் முறைகள் நிரூபணம் செய் கின்றன. குறிப்பாக அவரது ஆட்சித் தொடக்கத்தில் எதிர்ப் பூசல்களைத் தூண்டிய பவானிசங்கரத் தேவரையும் அவரது கூட்டாளிகளையும் இந்த மன்னர் கடுமையாக ஒடுக்கினார். இதனையொத்த மற்றொரு நடவடிக்கையாக, மறவர் சீமையின் வடமேற்கு எல்லையில் உள்ள மேல் நாட்டுக் கள்ளர்கள் சேது நாட்டின் கால்நடைகளை மிகுதியாகக் கவர்ந்து சென்றபொழுது அவர்கள் மீது கடுமையாக காவல் நடவடிக்கைகளை மேற் கொண்டு அவர்களில் நூற்றுக் கணக்காவர்களை கொன்று ஒழித்தார். குறும்பு அடக்கி’ என்ற விருது (தொடர் எண் 8) இத்தகைய காரணங்களால் புனையப்பட்டது ஆகும். மேலும் பாழ் செய்யும் உட்பகையை ஒடுக்குவதற்கு கமுதி இராஜசிங்க மங்கலம். பரம்பன், கோட்டைகளை பலப்படுத்திய துடன் தஞ்சை மராத்தியரது படையெடுப்பை தவிர்ப்பதற்காக வடக்கு எல்லையில் அறந்தாங்கிக் கோட்டையையும் எப் பொழுதும் போர்நிலைக்கு ஆயத்தமாக இருக்கும் நிலையில் வைத்து இருந்தார். இராமநாதபுரம் அரண்மனை அத்தாணி மண்டபத்தை பல வண்ண ஒவியங்கள் நிறைந்த அழகு மணி மண்டபமாக மாற்றியதுடன் மண்டபத்துக்கு அருகிலேயே நட