பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 38 1 நாடக அரங்கம் ஒன்றையும் அமைத்தார். இந்த அரங்கில் இந்த மன்னரைப் பற்றிய முத்துவிஜய ரெகுநாத சேதுபதி விஜயம்’ ’ என்ற தெலுங்கு பாவைக் கூத்து நடைபெற்று வந்தது. கலையார்வம் மிக்க இந்த மன்னர் . உபய சாமர உல்லாச நளினக்காரன் நட நாடக சாலை உண்டான தேவன்' என்ற விருதுகளால் புகழப்பட்டதில் வியப்பு இல்லை. வையை கிருதுமால் ஆறுகளின் வெள்ளம் கிழக்குக் கடலில் கலந்து வினா வதைத் தடுத்து இராமநாதபுரம் அருகே பெரிய கண்மாய் என்ற பயனுள்ள பெரிய நீர்த்தேக்கத்தை இவர் அமைத்தார். மதுரை யை அடுத்த தோப்பூரை அடைந்தவுடன் குண்டாறாக மாறி மூப்பையூர் கடலில் கலக்கின்ற கிருதுமால் நதியை கமுதிக்குக் கிழக்கே, முதுகுளத்துர் வட்டம் பயன்படும் வகையில் ரெகுநாத காவிரியாக புதிய கால் ஒன்றை அமைத்து புகழ் பெற்றார். இத் தகைய வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் தான் இந்த மன்னரது சிறப்பு விருதுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்விதம் பல துறைகளிலும் தமது முன்னோரான சேது மன்னர்களை விஞ்சி நின்ற இந்த மன்னர் வளமையிலும் சிறந்திருந்ததை கொடைக்குக் கர்ணன் படைக்கும் கொடைக்கும் ஓடாதான் என்ற விருது உறுதிப் படுத்துகின்றன. இராமேசு வரம் இராமநாதசுவாமி சன்னதியில் ரெகுநாத குருக்களுக்கு கைக்கிநாட்டு பால்குளம் கிராமத்தை தாளம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் பெற்றவர் ரெகுநாத குருக்கள் என்று குறிக்கப்பட்டிருப்பதாலும் கிழவன் என்ற ரெகு நாத சேதுபதி மன்னரது கொடைகளுக்கு உரியவாராக மற்றொரு ரெகுநாத குருக்கள் பெயர் செப்பேடுகளில் காணப்படுவதாலும் சேதுபதி மன்னரது குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த ஒரு மராட்டிய பிராமணக் குடும்பத்தினர் சேதுமன்னர்களைப் போன்றே ரெகுநாத என்ற அடைமொழியைக் கொண்டிருந்தனர் என்று ஊகிக்கப்படுகிறது. ജ്-ഈൗ (1978)