பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 6T6ñ). 6T6fv . &; tpfrafiy திருக்கோயில் தானத்தில் முத்துச்சலாபத்தின் பொழுது ஐந்துகல் வைத்து முத்துக் குளிக்கும் உரிமையைப் பெற்றனர். அதில் கிடைக்கும் முத்துக்களது வருமானத்தில் இருந்து ஆத்மநாத சுவாமி, சிவயோக நாயகி அம்மனுக்கு, அடப்ப வரிசை, ஆப ானம் ஆகியவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தச் செப்பேடு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டிலிருந்து திருப்பெருந்துறைக்கு தனியூர், பிரம்மதேசம். பவித்ரமாணிக்கம், சதுர்வேதி, மங்கலம் ஆதி கைலாசம், சிவபுரச் சேத்திரம் என்ற வேறு பெயர்களும் வழக் கில் இருந்து வந்தது தெரிய வருகிறது. இன்னொரு முக்கிய மான தகவலையும் இந்தச் செப்பேட்டுச் செய்தி தெரிவிக்கின்றது. அதாவது இதுவரை சேதுபதி மன்னர்களது ஆட்சி ஆண்டுகளை வரையறுத்து எழுதியுள்ளவர்கள் ராபர்ட் ஷாவல் ராஜாரம் ராவ் மற்றும் டாக்டர். சேஷாத்திரி ஆகியோர்.1 இந்தச் செப் பேடு வழங்கிய முத்துவிஜய ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக் காலம் பற்றி அவர்கள் கீழ்க்கண்டவாறு கணித்துள்ளனர். 1. ராபர்ட் ஷாவல் கி.பி. 1709 — 1723 2. ராஜாராம் ராள் H. H. 1711 – 17 24 3. டாக்டர். சேஷாத்திரி , , 1710 - 1720 ஆனால் இந்தச் செப்பேடு தே மன்னரால் சாலிவாகன சகப்தம் 1651 செள மிய ஆண்டுக்குச் சரியான கி. பி. 1729 வழங் கப்பட்டிருக்கிறது. இதற்கு பின்னரும் இதே மன்னரால் வேறு செப்பேடுகள் வழங்கப்பட்டதாக செய்தி இல்லை. ஆதலால் முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக் காலம் இந்த நூலாசிரி யர்கள் குறிப்பிட்டது போல் அல்லாமல் கி.பி. 1729ல் முடிவு பெற்றுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 1 ខ្លា Rao... M anual of Ramnad Samasthanam (1891) D. Dr. S. Seshadri – Sethupathis of Ramnad (unpbulished Thesis) 1972