பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 15 சேது காவலர்களது சமயப்பொறை, அவர்களது குடிகளாக ஒழுகி வந்த ஏனைய சமயத்தினரது ஒழுகலாறுகளுக்கு ஒவ்வாத தாக இருந்ததில்லை. மாறாக சேது நாட்டின் சிறுபான்மை இனத்தவரான சமண, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களது இறைக் கொள்கைகளையும் மதித்துப் போற்றும் மனோபாவம் பெற்று இருந்தனர். அந்த மக்களிடம் அன்பும், அனுதாபமும் கொண்டு ஆன்மநேய ஒருமைப்பாட்டை உகந்தவர்களாக விளங்கி வந்தனர். எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே பல்லாமல் வேறொன்றும் அறியேன்” எனப்பாடியுள்ள தாயுமான அடிகளது பூதஉடம்பைத் தாங்கியுள்ள புண்ணிய பூமிக்கு அதிபதிகளான இந்த மன்னர்கள் சமரச மனப்பான் மையை அரசதர்மமாக கொண்டு கடைபிடித்ததில் வியப்பில்லை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில், அவர்களது தொழுகை இடங்களைப் பராமரிக்க, அவர்களது புனித இடங் களில் திருவிளக்கு ஏற்றி வைக்க, புனித மகான்களது அடக்க விடங்களுக்கு வருகை தருகின்ற மக்களுக்கு உணவு வழங்க, கந்துாரி போன்ற ஆண்டுவிழாக்களைக் கொண்டாட பல்வேறு அறச்செயல்களுக்கு ஆதரவாக நிலக்கொடைகளை இந்த மன்னர்கள் நல்கியுள்ளனர். மேலும், பெரியார்களை தமராகப் பேணிக் கொள்ள வேண்டும் என்ற பொய்யாமொழிப் புலவரது பொன்மொழிக்கிணங்க, வள்ளல் சீதக்காதியைத் தமது அமைச்ச ாாகக் கொண்டதுடன் தம்முடைய உடன்பிறவாச் சகோதரராக விஜயரகுநாத பெரியதம்பி யாகவும் மதித்து வந்தார் மன்னர் கிழவன் சேதுபதி. அவரது முன்னவரான திருமலை ரகுநாத சேதுபதி வழங்கிய செப்பேடு, ஒன்றில் 'நமது காவல்குடியின ாான துலுக்கர்தறிக் கடமை நீக்கி’ என்ற தொடர் காணப்படு கிறது: இதில் இருந்து அந்த மன்னர் இஸ்லாமியத் தறியா ளருக்கு இயைந்த செயலை மேற்கொண்டிருந்தார் என்பதை புலப்படுத்துவதுடன் நமது என்ற செப்பேட்டுச் சொல் அந்தப் பிரிவு மக்களிடம் அந்த மன்னர் கொண்டிருந்த நேயம் மிகு நெருக்கமான நிலையையும் விளக்குவதாக உள்ளது. 34. தாயுமான அடிகள் கி.பி 1659ல் இராமநாதபுரம் நகரின் வடகிழக்கே சமாதி கொண்டுள்ளார் 35. இராமேசுவரம் குடமுழுக்கு மலர் (1974) பக்கம் C. 77