பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 44 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமநாதபுரம் கோதண்ட ராமசாமி ஆவயம். 3. செப்பேட்டின் காலம் : சகம் 1651 செள மிய ஆண்டு மார்கழி மாதம் (கி.பி. 12-1-1729) 4. செப்பேட்டின் பொருள் : மேலேகண்ட கோயிலுக்கு காராம்பல் கிராமம் தானம். இந்தச் செப்பேட்டை வழங்கிய முத்துவிஜய ரெகுநாத சேதுபதி மன்னரது இயற்பெயரில் அல்லாமல் ரெகுநாத சேதுபதி என்ற பொதுப்பெயரில் இந்தச் செப்பேடு வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் மன்னரது ஆட்சியாண்டான சகம் 1651 செளமிய - சித்திரையில் - திருப்பெருந்துறை ஆளுடைய பரமசாமிக்கு செப்பேடு வழங்கிஉள்ளதில் இருந்தும் இந்தச் செப்பேடு அதே சகம் ஆண்டு சவுமிய ஆண்டில் வழங்கி இருப்பதாலும் இந்தச் செப்பேடும் முத்துவிசைய ரெகுநாத சேதுபதியினது என்ற முடி விற்கு வர ஏதுவாக இருக்கின்றது. மேலும் இந்த மன்னரது தம்பியான முத்து ரெகுநாத சேதுபதி திருப்புல்லாணி பெரு மாளுக்கு இதே ஆண்டு தை மாதம் இரண்டு செப்பெடுகளை (செ.எண். 82, 83) வழங்கி இருக்கிறார். ஆதலால் முத்து விசைய ரெகுநாத சேதுபதியின் ஆட்சி செளமிய ஆண்டு மார்கழி மாதம் வரை நீடித்தது எனக் கொள்வது ஏற்புடையதாகும். இராமநாதபுரம் நகர் கோதண்ட இராமசுவாமி திருக்கோயிலுக்கு