பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 - குமார முத்துவிஜய ரெகுநாத சேதுபதி (கி பி. 1730-40) வலிவும் பொலிவும் பெற்ற இராமநாதபுரம் சீமை ஐந்தில் இரண்டு பகுதியினைக் கொண்ட சிவகங்கை என்ற புதிய சீமை யாகவும் ஐந்தில் மூன்று பகுதியைக் கொண்ட இராமநாதபுர மாகவும் கி.பி. 1730ல் பிரிவினையடைந்து பெருமையிழந்த நிலையில் சேதுபதி மன்னராக முடிசூட்டிக் கொண்டவர் கட்டயத் தேவர். இவரை வரலாற்று ஆசிரியர்கள் குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவரது ஆட்சிக்காலம் மிகக் குறுகிய ஐந்து ஆண்டுகளுக் குள்ளாக இருந்த போதிலும் இவர் தமது பக்தியுள்ளத்தை பறைசாற்றும் பல தானங்களையும் திருப்பணிகளையும் மேற் கொண்டிருந்தார். சேது வழிப்பாதையில் இராமேசுவரம் பயணி களுக்காக தீர்த்தாண்டதானத்திலும் தங்கச்சி மடத்திலும் அன்ன சாலைகளை நிறுவினார். இராமேசுவரம், திருப்புல்லானி, திருக்கோயில்களுக்கு பல ஊர்களை சர்வ மானியங்களாக அளித்து மகிழ்ந்தார். இராமநாதபுரம் கோட்டைக்கு கிழக்கே உள்ள பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தையும் புதிதாக நிர் மாணித்து அதற்கென அக்ரஹாரம் ஒன்றையும் நிறுவினார்.