பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 OO எஸ். எம் . கமால் - - இத்தகைய திருப்பணிகளை மேற்கொண்டதுடன் அல்லா மல் திருக்கோயில் திருப்பணி செய்தவர்களையும் ஊக்குவித்து வந்தார். அவரது தளகர்த்தரான வைரவன் சேர்வைக்காரர் தேவிபட்டினத்துக்கு அண்மையில் பெருவயல் கிராமத்தில் அமைத்த ரணபலி முருகன் திருக்கோயிலுக்கும் அவருடைய பிரதானி இராமலிங்கம் பிள்ளை குளவயல் கிராமத்தில் நிறுவிய சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கும் அன்றாட பூஜை, நைவேத்திய கட்டளைகள் முறையாக நடைபெறு வதற்கு சில ஊர்களை சர்வமானியங்களாக வழங்கி உதவினார். இந்த மன்னர் இன்னொரு சாதனையையும் ஏற்படுத்தி னார். சேது நாட்டில், முஸ்லிம்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்து வந்த போதிலும், அவர்களுக்கு அரசியல் சமு தாய நிலைகளில் அரசு ஊக்குவிப்பு இல்லாது இருந்தது. பதி னேழாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிக்கு வந்த ரெகுநாத திருமலை சேதுபதியும், கிழவன் என்ற ரெகுநாத சேதுபதியும் இந்த மக்களது குறைபாடுகளைக் களைவதற்கு முயன்றனர். அனுமந்தக்குடி, நாரணமங்கலம், பூலாங்கால், காரயேந்தல் ஆகிய ஊர்களில் உள்ள அவர்களது புனித இடங்களுக்கு நிலக் கொடை வழங்கி ஆதரித்தார். ஆனால் இந்த மன்னர் தமது நான்காவது ஆட்சியாண்டில் இராமநாதபுரம் ஈசாசாகிப் பள்ளி வாசலுக்கு ஒரு ஊரையே சர்வமானியமாக வழங்கியிருப்பது இவரது சமரச உள்ளத்தை பறை சாற்றுவதாக உள்ளது. வரலாற்றில் பெரும் புகழும் பெற்ற மறவர்சீமை பிளவு பட்டு பரப்பில் சுருங்கிய நிலையிலான இராமநாதபுரம் சீமையின் முதல் மன்னர் இந்த சேதுபதி.