பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 எஸ். எம். கமால் இதே மன்னர் கி.பி. 1674ல் அனுமந்தக்குடி பள்ளி வாச லுக்கு பலநிலக்கொடைகளை வழங்கி உதவினார். அவரைத் தொடர்ந்து ரகுநாத கிழவன் சேதுபதி, குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி, முத்துக்குமார ரகுநாத சேதுபதி ஆகிய மன்னர்கள் காரேந்தல், நாரணமங்கலம், பள்ளிவாசல்களுக்கும், இராமேசுவரம், இராமநாதபுரம்,கீழக்கரை, ஏறுபதி, ஆகிய ஊர் களில் அடக்கம் பெற்றுள்ள இஸ்லாமியப் புனிதர்களது அடக்க விடங்களுக்கு வருகின்ற பயணிகள் உணவு பெறுவதற்கும், நுந்தா விளக்கு தர்மத்திற்கும் பல ஊர்களை இறையிலியாக வழங்கினர். விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி என்ற மன்னர் (கி.பி. 1760-95), எமனேசுவரத்தைச் சேர்ந்த ஆசுக வி மீர்ஜவ்வாது புலவரைத் தமது அரசவைப்புலவராக அமரச் செய்த துடன் அவரது குடும்ப பராமரிப்பிற்காக சுவாத்தன், வண்ண வயல் ஆகிய சிற்றுார்களை சர்வமான்யமாக அளித்து மகிழ்ந் தார். மேலும், அந்த மன்னர் வங்க நாட்டுடன் கொண்டிருந்த சங்கு வணிகத்திலும், யாழ்ப்பாணத்துடன் கொண்டிருந்த அரிசி வணிகத்திலும் தமது நாட்டு இஸ்லாமிய மக்களது பணிகளைப் பயன்படுத்தி வந்தார். இவ்விதம் சேது மன்னர்களது சமயப் பொறை, சமரசமனப்பாங்கு ஆகிய சிறந்த பண்புகளில் சேதுபதி சீமையில், இஸ்லாமியர் ஏனைய சமுதாயத்துடன் அமைதியாக அன்பு பிணைப்புகளுடன் வாழ்ந்து வந்தனர். இந்த மன்னர்களது இன்னொரு பிரிவு குடிமக்களான இயேசு மதத்தினர், பதினாறாவது நூற்றாண்டு தொடக்கம் தங்களது சமயக் கொள்கைகளை "அஞ்ஞானிகளிடம் விளக்கம் செய்து இணக்கமானவர்களை அவர்களது சமயத்திற்கு மத மாற்றம் செய்து வந்தனர். நாட்டின் மொத்த மக்கட் தொகை யில் இவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையாளராக இருந்த பொழுதும், அவர்களுக்கும் வழிப்பாட்டு சுதந்திரம் வழங்கியதுடன், இராமநாதபுரம், கீழக்கரை, முத்துப்பேட்டை, பாம்பன், சருகணி பொன்னளிக்கோட்டை, ஒரியூர் ஆகிய ஊர்களில் தேவாலயங் களை அமைப்பதற்கும் உறுதுணையாக இருந்தனர். இவர்களது 36. அப்துல்ரகீம் எம்.ஆர்.எம்-தமிழ்நாட்டு முஸ்லிம் புலவர்கள் (1980) பக்கம் 150 37. கமால் எஸ்.எம் Dr விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக்கம் 43, 128