பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 45 (விளக்கம்) - - - - - 1. செப்பேடு வழங்கியவர் : குமாரமுத்து விஜய ரெகு நாத சேதுபதி காத்தத் தேவர். . . . 2. செப்பேடு பெற்றவர் : குளவயல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1652 சாதாரண ஆண்டு ஆனி மாதம் 8ந்தேதி (கி.பி.9-6-1729) 4. செப்பேட்டின் பொருள் மேலே கண்ட கோயிலுக்கு பூஜை நெய்வேத்தியம் நடப்பிக்க சர்வ மானியம் இந்த மன்னர், இரணிய கற்பயாச்சி ரெகுநாத திருமலை சேதுபதி காத்த தேவரது மருமகன் என்று தெரிகிறது. இவரது விருதாவளியாக இந்தச் செப்பேட்டில் எண்பத்து ஏழு விருதுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்தச் சேதுபதி மன்னரது செப்பேட்டிலும் இத்தகைய நீண்ட விருதாவளிகளின் பட்டியல் இடம் பெறவில்லை. ஆனால் இவை அனைத்தும் முந்தைய மன்னர்களது செப்பெடுகளில் கண்ட விருதுகளின் ஒட்டு மொத்தமாகும். இந்தச் செப்பேடு வழங்கப்பட்ட திருக்கோயில் இராமநாத புரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தின் கிழக்குப் பகுதியில் இாாமநாதபுரம் நகருக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள சுப்பிரமணியர் திருக்கோயில்