பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 7ו மிகப்பழமையான தேவாலயங்கள் (பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை - கிழக்கரையிலும், வேதாளையிலும் இருந்ததை வரலாற்றுக்குறிப்புகளில் காணமுடிகிறது. ஓரியூர் கிராமத்தில் கொலையுண்ட புனித பிரிட்டோ பாதிரியாரது (அருளானந்தர்) நினைவாக கி.பி. 1734ல் நிர்மாணிக்கப்பட்ட தேவாலய கட்டு மானத்தின் பொழுது கட்டையத்தேவர் என்ற குமாரமுத்து ரெகுநாத சேதுபதி மன்னர் கலந்து கொண்டு செங்கல் சுமந்து கட்டுமானத் திருப்பணியைத் தொடங்கி வைத்தார் என்ற செய்தி இந்த மன்னர்களது மனிதாபிமானத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சிறுவெள்ளி, சருகணிப் பகுதிகளில் மதம் மாறிய மறவர்கள் தொடர்ந்து அவர்களுடைய பாரம்பரிய தேச காவல் கடமைகளை' நிறைவேற்றுவதற்கு சேதுபதிகள் அமைதித்தனர். மதம் மாறியதற்காக அவர்களது உரிமை களும், சலுகைகளும் மறுத்தளிக்கப்படவில்லை. போர்த்துகீசிய ரங்கிகளால் அமைக்கப்பட்ட முத்துப்பேட்டை சர்வேசுவர சுவாமி தேவாலயத்திற்கு கி.பி. 1792ல் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, இரண்டு கிராமங்களை அந்த ஆலயத்தின் பரா மரிப்பிற்காக சர்வமானியமாக வழங்கி உதவினார். அந்த மான்ய கிராமங்களின் வருவாய்த்தொகையை அந்த ஆலய நிர்வாகி அரசிடமிருந்து தஸ்திக் அலவன்ஸ்ாக ஆண்டு - பெற்றுவருகின்றனர். சான்றோர்களுக்கு சர்வமான்யம் : மற்றும், இந்த மன்னர்கள் தங்களைப் பாடிவந்த தமிழ்ப் புலவர்க்கும், நாடிவந்த நன்னூல் வித்தகர்களுக்கும் பலநூறு கிராமங்களை, அகரங்களாகவும் சதுர்வேதி மங்கலங்களாகவும் ஈந்து மகிழ்ந்தனர். இதனால் பாவுக்கு இசையும் பெயரே மணந்து மெய்ப்பாவலர்தம் நாவுக்கு இசையும் பெரும் புகழார் . என இந்தப் புவியரசர்களை கவியரசர்கள் தங்களது புனித வாக்கினால் வியந்து புகழ்ந்தனர். அந்தப் புலவர் பெருமக் களில் பொன்னாங்கால் அமுதகவிராயர், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர், எமனேஸ்வரம் மீர்ஜவ்வாது 38. கிழக்கரை சொக்கநாத சுவாமி கோயில் கல்வெட்டு - AR 39. Saulie re S.J. Red sand (1947) p. 485 10. ராகவ ஐயங்கார்-மகாவித்வான். ரா. - தனிப்பாடல்கள்