பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18 எஸ். எம். கமால் - = சோழனது வாழ்வு முடிவுறும் வடக்கிருத்தலில் பங்கு பெற்று தம்மை மாய்த்துக் கொண்ட இந்தப் புலவர் பெருமகனது மாண்பினை சங்கப்புலவர்களான பொத்தியாரும், கண்ணக னாரும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். மடப்புரமாக வழங்கப்பட்ட பொசுக்குடி இன்றைய முது குளத்துார் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கான விரிவான எல்லைகள் செப்பேட்டில் குறிக்கப்படாமல் நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், இடை, குடி, பள்ளு உட்பட சர்வ மானியம் என வரிகள் 29, 30ல் குறிக்கப்பட்டுள்ளன. மற்றும் இந்த செப்பேட்டினைப் பொறித்தவர் பெயர் குறிப்பிடப்படாமல் ஸ்தலஸ்தபதி என்று மட்டும் குறிப்பிடப் பட்டிருப்பதால் இந்த செப்பேடு, சேதுபதி மன்னர் திருவாவடு துறை மடத்துக்கு வருகை தந்தபொழுது அங்கேயே வழங்கப் பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.