பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 48 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : குமாரமுத்து ரெகுநாத சேதுபதி காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : மாங்குண்டு கோபாலய்யன் புத்திரன் இராமய்யன் 3. செப்பேட்டின் காலம் : சாலி வாகன சகாப்தம் 1654 பரிதாபி ஆண்டு (17-4-1732) 4. செப்பேட்டின் பொருள் : சேரந்தை கிராமம்தானம் இந்த மன்னரது விருதாவளியாக அறுபத்தியாறு சிறப்புப் பெயர்கள் இந்தச்செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை களில் மதுரையர் பச்சதாபன்’ என்ற ஒரேயொரு சிறப்புப் பெயர் மட்டும் புதிய விருதாவளியாகக் காணப்படுகிறது. மாங்குண்டு கோபால ய்யன் புத்திரன் இராமைய்யனுக்கு சேரந்தை என்ற கிராமத்தை இராமநாதபுரம் சேதுபதிமன்னர் தனுக்கோடிக்கரையில் தானம் பண்ணியதை இந்தச்செப்பேடு தெரிவிக்கின்றது. மாங்குண்டு என்பது இராமேஸ்வரம் நகருக்கு வடபுறத்தில் உள்ள சிற்றுார். தானம் வழங்கப்பட்ட சேரந்தை முதுகுளத்துார் வட்டத்தில் அமைந்துள்னது. இந்தக் கிராமத்தின் பெயர் விகுதியான ஆந்தை என்ற சொல் இதே பகுதியில் வேறுசில ஊர்களுக்கும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். புல்லந்தை, கீரந்தை, பண்ணந்தை, மாறந்தை விடந்தை என்பன அவை. இவைதவிர கோட்டந்தை, வேட்டந்தை, என்ற ஊர்ப் பெயர்களும் இதே வட்டாரத்தில் உள்ளன. கடைச்சங்ககாலப் புலவரான பிசிராந்தையார்' வாழ்ந்த பிசிராந்தையும் இந்தப் பகுதியிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.