பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 எஸ். எம். கமால் புலவர், மருதூர் தலமலைகண்ட தேவர், பரத்தை வயல் முத்து நாயகப் புலவர், சிறுகம்பையூர் சர்க்கரைப் புலவர், மாசிலாமணிப் புலவர். மன்னாரெட்டிகள், கவிக்குஞ்சர பாரதியார், அட்டவ தானம் சரவணப்பெருமாள் கவிராயர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இன்னும் தொண்டால் உயர்ந்த கலைஞர்களை, திறனால் சிறந்த குடிமக்களையும், இந்த மன்னர்கள் ஆதரித்து மகிழ மறந்து விடவில்லை என்பதை அவர்களது செப்பேடுகள் சொல்லுகின்றன. . இராமேசுவரம் திருக்கோயில் அருகே சேதுபதிமன்னர் பவனிவந்த ஆனையின் வாலைப்பிடித்து நிறுத்தி தமது வலி மையை நிலைநாட்டிய வல்லவர் முத்துவிஜயன் சேர்வை, மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் செய்துவந்த குல சேகரபட்டர், அருப்புக்கோட்டை வாழவந்த அம்மன்கோவிலில் அற்புதமாக நாதஸ்வர வாத்திய சேவை செய்த கலைஞர் கறுப்பணன், திருச்சுழியல் திருக்கோவிலில் வேடங்கட்டி ஆடி மக்களை மகிழ்வித்த தேவரடியார் கல்யாணி, ஆவுடையார் கோவில் அம்மன் சன்னதியில் வீணை வாத்திய சேவை செய்த கலைஞர் கோபால் அய்யர் ஆகிய பெருமக்களுக்கு நிலமான்யங் கள் வழங்கி அவர்களது திறனும், தொண்டும் தொடர்ந்து சமுதாயத்திற்கு பயன்பட ஏற்பாடு செய்தனர். செவ்வை சூடு வார் என சிறப்பு விருதுபெற்றவரும் வடமொழி தென்மொழி வித்தகருமான வீரை கவிராஜபண்டிதருக்கு நல்லுக்குறிச்சி கடம்பங்குளம் சர்வமான்யமாக அளித்தனர். இவை தவிர வைத் தியம், பஞ்சாங்கம், புரோகிதம், அடைப்பம், அம்பலம், அவ தானம் கோவில் கணக்கு, திசைகாவல், தேசகாவல் போன்ற எண்ணற்ற ஊழியங்களுக்கு உயர்வும், உலுப்பையும் பெற்றோர் பலர். இங்ங்னம், சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும், தக்காரும் மிக்காருமின்றி தனித்து ஒளிர்ந்த உன்னதப் பெரு மக்களை உயர்த்தி வாழ்த்தி வளமான வாழ்க்கையை அவர் களுக்கு வழங்கி மகிழ்ந்தவர்களும் சேதுபதி மன்னர்கள். 12 41. Board of Revenue—Misc. Register—Vol VI (1811 AD) 42. இராமநாதபுரம் சமஸ்தான நிலமானிய கணக்கு