பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 O. எஸ். எம் . கமால் கட்டளை எதுவும் அந்த திருக்கோயிலில் இல்லாது இருந்த குறையை உணர்ந்து மன்னர் இந்த தானத்தின் மூலம் நிறைவு செய்துள்ளார். இந்தக் கட்டளைக்கு குளத்துார் கிராமம் முழுமையாக வழங்கப்பட்ட போதிலும் இராமேஸ்வரம் நகரில் உள்ள சின்னையர் தோப்பும் புன்னைத் தோப்பும் இந்தக் கட்டளைக் காக கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இராமேசுவரம் நகருக்குள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்ற நெல் முதலிய தானியங்கள் தட்டுமுட்டு சாமான்கள் கோயில் உபயோ கத்திற்காக விற்கப்படுகின்ற சாமான்கள் அளக்கப்படுபவை, எண்ணப்படுபவை ஆகிய இனங்களைச் சேர்ந்தவைகளுக்கும் அரண்மனைக்காக வசூலித்து வரப்பட்ட அள்ளுத்தீர்வை. மகமை, ஆகியவைகளையும் வசூலிக்கத் தேவையில்லை என்றும் இதன் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் பணியில் சேதுராமலிங்க ஐயன் என்பவர் ஈடுபட்டிருந்தார் என்பதையும் இந்தச் செப்பேடு துலக்குகின்றது. இந்க வருவாய் அனைத்தும் சபாபதி கட்டளைக்கு சேரவேண்டும் என்ற பெரும் விருப்புடன் மன்னர் இந்த தானத்தை வழங்கியுள்ளார். தவசம், சாமக்கிரியை, தட்டுமுட்டு விக்கினம் என்பன இந்த வட்டார வழக்குகள்