பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 19 அவர்களது இந்தக் கொடைப் பண்பினை, திருந்துதரு மாதனமுஞ் சீவிதமுங் கோயிற் செய்யவள ஆர்களு மடப்புறமு மன்னம் அருந்தவரு சத்திரநல் லூர்களு மறத்திற் காக்கிய சிறப்புனது பாக்கிய மி தல்லாற் பெருந்தகைமை கொண்டபுல வோரினிது வாழப் பேணியுத வும் வயலி னுார்களை வாமோ இருந்தவ முளராலது சேதுபதி யாதல் எண்மையிலை யென்பருயர் வண்மையுள வேந்தே' எனப் பாராட்டி பாடியுள்ளனர். புலவர் பெருமக்கள்: இவ்விதம் கி.பி. 1604 முதல் கி.பி. 1795 வரை இரண்டு நூற்றாண்டுகளில் தென்னகத்து தன்னரசினர் யாரும் செய்யாத சாதனையாக இராமனாதபுரம் சேதுபதி மன்னர்கள் சமய உணர்வுகளின் சிறப்பான வளர்ச்சிக்கும், சமய ஒருமைப் பாட்டிற்கும் தமிழ் மொழியின் செழிப்பிற்கும், உள்ளத்தால். உணர்வால் உயர்ந்த மக்களை உருவாக்குவதற்கும், திருக் கோயில்களையும், திருமடங்களையும், தொழுகைப் பள்ளிகளை யும், தேவாலயங்களையும் ஆதரித்து ஊக்குவித்து வந்திருப்பதை அவர்களது செப்பேடுகளும் ஒலைப்பட்டயங்களும், கல்வெட்டுக் களும், நிலமான்ய கணக்குகளும் செப்புகின்றன. வரலாற்று சிறப்புமிக்க இந்த மன்னர்களது சிறந்த சாதனைகளான அறப் பணிகளை வரலாற்று நோக்கில் ஆராய்ந்து அச்சிட்டு வெளி யிடுதல் தமிழக வரலாற்றுக்கு உதவும் உன்னத செயலாகும். ஆனால் இந்தப் பயனுள்ள பணியினை இதுவரை யாரும் மேற்கொள்ளாததால் வரலாற்றுக்கு உதவும் சேதுமன்னர்களது ஆவணங்கள் காலச்சுழலில் அருகி அழிந்து மறைந்து விட்டன. கி.பி. 1702லும், 1710லும், சேதுபதிச் சீமையெங்கும் ஏற்பட்ட புயல், வெள்ளம், கி.பி. 1701ல் இராணி மங்கம்மாளது படை யெடுப்பு, கி.பி. 1771ல் தஞ்சைமன்னர் துல்ஜாஜி படையெடுப்பு, கி.பி. 1772ல் ஆற்காட்டு நவாப்பும் ஆங்கிலேயரும் இணைந்து நடத்திய தாக்குதல், கி.பி. 1797 - 1799ல் மறவர் சீமை 13. மகாவித்வான் ரா. ராகவஐயங்கார்-நவராத்திரிப்பாடல்கள் (1913)