பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 51 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : குமாரமுத்து விசயரெகுநாத காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : பழனிமலை பூரீவேலாயுதசுவாமி திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1656 ஆனந்த வருடம் கார்த்திகை மீ (கி. பி. 11-12-1734) 4. செப்பேட்டின் பொருள் : பழனிமலை வேலாயுதசுவாமி சன்னதி விளாபூசை மற்றும் தைபூசம் 8ந் திருநாள் விழா விற்கு நிலதானம். இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னரது எழுபத்து ஐந்து சிறப்புப் பெயர்கள் விருதாவளியாக இங்கு இடம் பெற்றுள்ளன. இவைகளில் நரலோக கண்டன் (வரி 15) மன்மத சொரூபன் (வரி 20) ருத்ராட்ச மாலிகாபரணன் (வரி 22) இராமநாதசுவாமி சுப்பிரமணிய சுவாமி பாதாரவிந்த சேகரன் (வரி 24) அஞசாதவனராமன் (வரி 29) என்ற ஐந்து சிறப்புப் பெயர்கள் இந்தச்செப்பேட்டில் புதுமையாகக் காணப்படுகின்றன. பழனி பூரீவேலாயுதசுவாமி சன்னதியில் தைமாதந்தோறும் நடைபெறும் விளா பூஜைக்கும் தைப்பூசம் 8ந் திருநாள் மண்டகப் படி சிறப்புக் கட்டளை அபிஷேகம் நெய்வேத்தியம் திருமாலை திருவிளக்கு, சந்தனம், முதலிய கைங்கரியங்களுக்கு பயன்படுவ தற்காக இராமநாதபுரம் சீமையில் உள்ள கொல்லனுளர், கங்கை கொண்டான், என்ற இரண்டு ஊர்களை தானமாக வழங்கப்பட்