பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O எஸ். எம். கமால் யெங்கும் கிளர்ந்தெழுந்த மக்களது ஆயுதப் போராட்டம் என்ற வரலாற்று நிகழ்வுகள் இந்த ஆவணங்களின் அழிவிற்குக் காரணமாக இருந்துள்ளன. எஞ்சியுள்ளவைகளையும் வைத்திருப் பவர்கள் ஆய்வாளர்களது பார்வைக்குக்கூட கொடுக்க மறுத்து அதிசயப்பொருளாக மறைத்துக் காத்துவருகின்றனர். அதனால் அவைகள் காலவெளிச்சத்தின் உண்மை விளக்கத்தைப் பெற முடியாமலும் தமிழக வரலாற்றின் தொய்வுப் பகுதிகளை நிறைவு செய்ய முடியாமலும் உள்ள நிலை நீடித்து வருகிறது. இதனை வழிமொழியும் முகமாக கி.பி. 1860ல் இராம நாதபுரம் சமஸ்தானம் திவான் பொன்னுச்சாமித்தேவரது குறிப் புகள் அமைந்துள்ளன.