பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவணங்கள் - அரிமா நோக்கு அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் மன்னரது செங்கோன்மை அமைந்திருத்தல் வேண்டுமென்பது முந்தைய அரசியல். குடி தழுவி கோலோட்சிய மன்னர்கள் மக்களது தேவைகளை நிறைவு செய்வதை தங்களது தலையாய கடமை யாகவும் இராஜ தர்மமாகவும் கொண்டிருந்தனர். அறியாமையில் ஆழ்ந்திருந்த மக்கள் ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரு மடங்கள், வழி ஆன்மீக எழுச்சி பெறவும் அந்த வகையில் சமயநெறிச் சான்றோர்களது சேவை தொடரவும் ஆவன செய்து வந்தனர். சேது மன்னர்களும் இந்த அரிய பண்பினைப் பேணி வந்தனர் என்பதை அவர்களது அறக்கொடைகள் சான்று பகர் கின்றன. இதுவரை கிடைத்துள்ள அவர்களது பட்டயங்களில் பெரும் பாலானவை நிலக்கொடை பற்றியவை. மற்றயவை மகமை, காணியாட்சி, இசைவு முறி, ஆணைகள், நியாயத் தீர்ப்புரை ஆகியவை இவையனைத்தும் வரலாற்று ஆவணங்கள் என்ற வகையில் மறவர் சீமையின் அரசியல் சமூகம், வணிகம்