பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 எஸ். எம் . கமரல் -- புரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் அமைந்து உள்ளது. முந்தைய நிலக்கூறான செவ்விருக்கை நாட்டில் அமைந்திருப் பதாக செப்பேட்டில் காணப்படுகிறது. அந்த ஊருக்கான நான்கு எல்லைகள் மிகவும் துலக்கமாக தரப்பட்டுள்ளன. இதில் சொல்லப் படுகின்ற வயறுனேந்தல் (வரிகள் 43, 45) கிராமம் இன்று வயிரவனேந்த ல் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊரில் நாட்டு வைத் தியம், ஆசிரியப்பணி, ஆகிய பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முந்தைய மன்னர்கள் மானிபங்கள் வழங்கி யிருப்பதும் அவை இந்த ஊருக்கான எல்கை மாலில் முறையே குடி மகன் புஞ்சை நல்ல முத்தையன் பட்டவிருத்தி எனக் குறிப் பிட்டு இருப்பது ஆகும். அங்கு குயவர்கள் வாழ்ந்து வந்ததை குயவன் திடல் என்ற சொற்றொடர் குறிக்கின்றது. மற்றும் குளத் துார் கண்மாய் , வெண்ணெய்குடி கண்மாய் , காருகுடி, கண்மாய், பழைய புதிய கண்மாய்கள் என ஐந்து கண்மாய்களும் அவைகளுக்கான வாய்க்கால்கள் குளத்துர்கால், காவார்கால்னுா அழகுப்பிள்ளைகால், நயினா மணியக்காரன்கால், தேத்தாங்கால் கால், என்ற பெயரில் அமைந்து இருந்ததும் இந்தச் செப்பேட்டுச் செய்தியாக உள்ளன. இவை நொச்சியடியிறக்கம், மருந்தோண்டி யிறக்கம், ஆகியன அங்குள்ள முக்கியமான அடையாளங்களா கவும் காட்டப்பட்டுள்ளன. இந்த ஊரின் கண்மாய் கலுங்கை யும் இரண்டு மடைகளையும் கி.பி 1637ல் சடைக்கன் சேதுபதி மன்னர் அமைத்தாக அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலேகண்ட எல்கைமாலில் வகுத்துக்கால், கலுங்கு, திடல், இறக்கம், பாசி, படுகை, பொலியேந்தல் என்பன இந்த வட்டாரச் சொற்கள்.