பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 54 (விளக்கம்) 1. செப்பேட்டை வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி காத்த தேவர் 2. செப்பேடு பெற்றவர் : ராமலிங்க நம்பியின் புத்திரன் மங்களேசுவர குருக்கள் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1599 பிங்கல ஆண்டு வைகாசி மீ” (கி. பி. 23-5-1737) கதையனேந்தல் என்ற கிராம தானம். 4. செப்பேட்டின் பொருள்

இந்தச் செப்பேட்டை வழங்கிய ரெகுநாத சேதுபதியின் விருதாவளியாக இந்தச் செப்பேட்டில் ஐம்பத்து ஒரு சிறப்பு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் இந்த மன்னரது முந்தைய செப்பேடுகளில் காணப்படுகின்றன. இராம லிங்க நம்பி புத்திரன் மங்ளேசுவரக்குருக்கள் என் பவருக்கு மன்னர் காக்கூர் வட்டகையில் உள்ள கதையனேந்தல் என்ற கிராமத்தை பூதானமாக வழங்கியதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த ஊர் இன்றைய முதுகுளத்துார் வட்டத் தில் முதுகுளத்துாருக்கு கிழக்கே திருஉத்தரகோசமங்கை சாலை யில் எட்டுக்கல் தொலைவில் உள்ள காக்கூர் என்ற பெரு ஊரை அடுத்த சிற்றுாராகும் இந்த சிற்றுரை மன்னர் தமது இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள ராச ராஜேஸ்வரி அம்மன் கோயில் சன்னதியில், குருக்கள் கையில் தானம் பண்ணிக் கொடுத்தாகத் தெரிகிறது. குருக்களது ஊர் பெயர் செப்பேட்டில் குறிக்கவில்லையென்றாலும்,