பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 எஸ். எம். கமால் == விவசாயம், வரிப்பாடுகள், நிர்வாகம் நிலக்கூறுகள் ஆகியவை களை அறிவிக்கும் அரிய ஆவணங்களாக அமைந்துள்ளன. இவையனைத்தும் அமைப்பிலும் அளவிலும் முந்தைய மன்னர் களது செப்பேடுகளைப் போன்றதாகக் காணப்பட்டாலும் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவைகள் தாம்புர சாசனம்’ ’ மகாசாசனம் தர்ம சாசனம் தானசாசனம் கற்பக மடல்' என்றபெயர்களில் குறிப் பிடப்பட்டுள்ளன. இவையனைத்தும் நீண்ட சதுரவடிவில் அமைக் கப்பட்டுள்ளன நீளப் பகுதியின் இடதுபுறம் தாமரை மொக்குப் போல கூம்பலாகக் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது. இவைகளில் பெரும்பாலும் முதல் இரண்டாவது பக்கங்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு செப்பேட்டில் (செ. எண் 17) நான்கு பக்கங்களிலும் இன்னும் ஒரு செப்பேட்டில் (செ. எண்:84) ஐந்து பக்கங்களிலும் வரையப்பட்டுள்ளன. இவைகளில் வடிவில் பெரியது நாற்பத்தி மூன்று சென்டிமீட்டர் நீளமும் பதின்மூன்று சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. (செ.எண் 7) இதனைப் போன்றே இதுவரைக் கிடைத்த செப்பேடுகளில் மிகச்சிறியது பதினெட்டு சென்டிமீட்டர் நீளமும் பதினான்கு சென்டிமீட்டர் அகலமும் உடையதாகும் (செ. எண் 23) இந்தச் செப்பேடுகளில் மிகுதியான எண்பத்தியொன்பது வரிகளைக் கொண்ட செ.எண் 38, கி பி. 1714ல் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கான தானத்தைக் குறிப்பிடுகின்றது. கி.பி. 1764ல் விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதியினால் வழங்கப் பட்ட காணியாட்சி பற்றிய செப்பேட்டில் இருபத்தியொரு வரிகள் மட்டும் உள்ளன. (செ. எண். 63) குறைந்த வரிகளைக் கொண்ட செப்பேடு இது ஒன்றுதான். இந்தச் செப்பேடுகளில் முதலில் நமது பார்வையில் படுவது கைப்பிடிப் பகுதிக்கு அருகிலும் செப்பேட்டின் தலைப் பிலும் உன்ள வரைகோட்டுச் சித்திரங்கள், புடைச்சிற்பங்கள், மற்றும் மங்கலத் தொடக்கத்திற்கான சொற்கள், வேல், சங்கு, சக்கரம், மயிலும் பாம்பும்-வள்ளி, தெய்வானை முருகன் ஆகிய உருவச் சித்திரங்கள்: திருப்பெருந்துறை திருக்கோயில், திருவாடு துறை திருமடம், அழகர்கோயில், சம்பந்தப்பட்ட செப்பேடுகளில் கூடுதலான வரைகோட்டுச் சித்திரங்கள் காணப்படுகின்றன.